சோனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் சினிமா ஓடியோ

Thursday, July 21, 2011


தமிழ் சினிமாவில் அதிக முதலீட்டை இறக்குகிறது சோனி மியூசிக் நிறுவனம்.
அஜீத் நடிக்கும் ”மங்காத்தா”, விஜய்யின் ”வேலாயுதம்” ஆகிய படங்களின் ஓடியோ உரிமையைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், 4 மில்லியன் டொலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக சத்யம் சினிமாசின் திங்க் மியூசிக் நிறுவனத்தின் வசமிருந்த 146 படங்களின் ஓடியோ உரிமையையும் சோனி கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா ஓடியோ உரிமையில் 50 சதவீதம் சோனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.
அதேநேரம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ”எந்திரன்” மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரமின் ”தெய்வத்திருமகள்” படங்களின் ஓடியோ உரி்மை திங்க் மியூசிக் வசமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல படங்களின் ஓடியோக்களை திங்க் மியூசிக் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets