”மங்காத்தா” படத்தில் வரும் 2 அஜீத்களில் ஒரு அஜீத்தின் கதாபாத்திரம் தான் இது.
”மங்காத்தா” படம் குறித்து அஜீத் அளித்துள்ள பேட்டியொன்றில் தான் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். தனது 50 வது படமான மங்காத்தா பற்றி அஜீத் அளித்துள்ள பேட்டியில், வெங்கட் பிரபு ஒரு தொழில்முறை இயக்குனர். மிக மிக பக்குவமானவர். அவரோடு பணியாற்றிய நாட்கள் இனிமையானவை. அனைவரையும் அனுசரித்து வேலை வாங்குவதில் வெங்கட்டுக்கு நிகர் யாருமில்லை.
நான் இதுவரை வேலை பார்த்த இயக்குனர்களிலேயே பெஸ்ட் என்றால் வெங்கட்டைத் தான் சொல்வேன். இந்தப் படத்தில் நான் வினாயக் மாதவன் என்ற கதாபாத்திரத்தில் வருகிறேன். பணம் பணம் பணம் என்று பணத்தையே குறியாகக் கொண்ட கதாபாத்திரம் அது. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு மோசமான கதாபாத்திரம் அது. நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னொரு கதாபாத்திரம் பொலிஸ் கதாபாத்திரம் என்று தெரிவித்துள்ளார். |
0 comments:
Post a Comment