இதனால் கன்னடம், மலையாளம் பக்கம் கவனம் செலுத்தினார்.
மலையாள முன்னணி நாயகரான மோகன்லாலை வைத்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் பாவனா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலமாக மோகன்லால் - பிரியதர்ஷன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
படப்பிடிப்பு முழுவதும் சிரிப்பும் கூத்தும் கும்மாளமுமாக போனது. இயக்குனர் பிரியதர்ஷன் - மோகன்லால் இருவரின் நெருக்கமான நட்பை பட உலகம் நன்கு அறியும். இருவரும் ஆழமான அன்பை பரிமாறி, பழகுவதை அருகில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.
புகழ் பெற்ற இரு கலைஞர்களுடன் பணியாற்றியதை என் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படத்தில் நடிப்பதாகவே நான் உணரவில்லை, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக கழிந்தது என்கிறார் பாவனா.
கொலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுக்க, சரியான பட வாய்ப்புக்காக பாவனா காத்திருக்கிறாராம். |
0 comments:
Post a Comment