சர்வதேச நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் மீது அமெரிக்க ஹொட்டலின் பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்தார்.
இதன் பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராஸ்கான் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த ஸ்ட்ராஸ்கானுக்கு பாலியல் குற்றச்சாட்டு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்ட்ராஸ்கான் தனது மனைவி ஆன் சின்கிளேரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விடயத்தையும் சொல்லிவிடுவாராம்.
பாலியல் புகாரில் சிக்குவதற்கு முன் 3 பெண்களுடன் தங்கியிருந்தேன். ஹொட்டலின் பெண் ஊழியர் தான் பணத்துக்காக என்னை சிக்க வைத்துவிட்டார் என தனது மனைவியிடம் கூறியுள்ளார் ஸ்டிராஸ்கான். தனது கணவர் பெண் பித்தர் என்பது கூட ஆன் சின்கிளேருக்கு ஏற்கனவே நன்கு தெரியுமாம். அதனால் இந்த குற்றச்சாட்டை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தனது கணவர் ரொம்ப நல்லவர் என அவர் கூறுகிறார். ஸ்டிராஸ்கான் பற்றி ஆன் சின்கிளேர் கூறுகையில்,"எனது கணவர் பெண்களை வசீகரிப்பார். ஆனால் கொடியவர் அல்ல. நான் அவரை காதலித்த போதே என்னை திருமணம் செய்யாதே. நான் பெண் பித்தர் என ஸ்டிராஸ்கான் வெளிப்படையாக கூறினார்" என்றார்.
எனது கணவர் நல்லவர்: ஸ்டிராஸ்கான் மனைவி புகழாரம்
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment