இசைக்கு ஏற்ப தண்ணீரில் சாகசம் செய்யும் நிகழ்ச்சியாக இந்த ஒருங்கிணைந்த நீச்சல் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீராங்கனைகள் ஒரே விதமான வண்ண உடைகளுடன் இசை அதிர்வுக்கு ஏற்ப தங்களின் ஒன்றிணைந்த அதிசயமிக்க சாகசத்தை வெளிபடுத்தினார்கள்.



பல வகையான பூச்சிகள் போன்று அழகிய வடிவத்தில் வண்ணமயமாக தங்கள் கால்களையும், கைகளையும் இசைக்கு ஏற்ப அசைத்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினர்.



ஒரு குழுவில் 8 வீராங்கனைகள் தங்களது 16 கைகளையும் 16 கால்களையும் இசை கலவைக்கு ஏற்ப ஒரே விதமாக அசைத்து தண்ணீரில் நடனமாடி பிரமிக்கதக்க தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.




சீனாவின் சாங்காய் என்ற இடத்தில் FINA ஒருங்கிணைந்த நீச்சல் சாம்பியன் சிப் போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதில் 45 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் அந்த ஆண்டிற்கான சாம்பியன் சிப் பட்டத்தை தட்டிச்செல்வர்.
நீச்சல் வீராங்கனைகளின் அழகிய படைப்பு(படங்கள் இணைப்பு)
Wednesday, July 20, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
1:39 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment