ஐந்தாம் ஈழப் போருக்கு தயாராகும் புலிகள்! பிரெஞ்சு சஞ்சிகை பரபரப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பிரெஞ்சு மொழி சஞ்சிகைகளில் ஒன்றான ASIES தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை நடப்பு விவகாரங்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கின்றமை வழக்கம்.
இலங்கை தொடர்பாக பிரசுரித்து உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே புலிகள் மீண்டும் ஒரு போருக்காக ஒரணி சேர்ந்து வருகின்றனர் என்றும் ஐரோப்பிய நாடுகள், கனடா, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகியவற்றை தளமாக கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இதில் மேலும் கூறப்பட்டு இருப்பவை வருமாறு :-
- புலிகள் ஓரணி சேர்ந்து வருகின்றனர் என்று பல நாடுகளின் புலனாய்வாளர்களும் தெரிவித்து உள்ளார்கள். புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பின் ஒரு பகுதி தொடர்ந்தும் பலமாக இருந்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புக்களுடன் சேர்ந்து வெளிநாடுகளில் புதிய வலையமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வருடம் கப்பலில் கனடாவுக்குள் பிரவேசித்தபோது 500 பேர் வரையான தமிழர்கள் பிடிக்கப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பிரான்ஸ், பிரிட்டன், நோர்வே மற்றும் தென்னாசிய நாடுகள் ஆகியவற்றில் புலி ஆதரவு சக்திகள் நிலை கொண்டு உள்ளார்கள்.
கொரில்லாக்கள் ஒரு போதும் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் வைத்து 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்டார்.
இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் அரசுடன் அண்மைய காலங்களில் பேச்சு நடத்தி இருக்கின்றார்கள். பதிலுக்கு அரசியல் நீரோட்டத்தில் இணைவார்கள் என்று கூறி உள்ளனர்.
10,000 புலிகள் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றனர். புலிகள் வலை விரிக்கின்றார்களா? என்று பெரிதும் அஞ்சுகின்றது இலங்கை அரசு.
ஐந்தாம் ஈழப் போருக்கு தயாராகும் புலிகள்! பிரெஞ்சு சஞ்சிகை பரபரப்பு
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
11:31 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment