கோப்பாயில் ஜனாதிபதி தமிழில்
வாக்குகளை எதிர்பார்த்து சேவை செய்வது எமது நோக்கமல்ல. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வது எமது பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தெரிவித்தார்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயல்படுபவர்கள் 13ஆவது திருத்தம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எனினும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுவதே எமது நோக்கமாகும் எனவூம் தெரிவித்த ஜனாதிபதிஇ குறுகிய அரசியல் நோக்கங்கள் மூலம் மீண்டும் இந்த நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவூம் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபையின் நிதி யூதவியூடன் யாழ். கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி பாடசாலைக் கட்டடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்-
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக பிரதமர் டி.எம். ஜயரட்ன பல அமைச்சர்களுடன் இணைந்து இப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 30 வருட காலம் நிச்சயமற்றதும் எதிர்பார்ப்புகளை சு+ன்யமாக்கியதாகவூம் கழிந்துள்ளது. அந்த 30 வருட பின்னடைவூகளை மீளப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் திட்டங்கள் வடக்கு மக்களின் உரிமைகளையூம் தேவைகளையூம் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு எமக்குண்டு.
பொதுவாகவே எமக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கு நாம் ஏன் சேவை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. நாம் அந்த நிலைப்பாட்டில் செயற்படுபவர்கள் அல்ல. நான் இந்த நாட்டின் சகல மக்களினதும் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய வேண்டியது எனது பொறுப்பு.
குறிப்பாக யாழ். குடாநாட்டின் வீதிகள் மின்சாரம்இ கல்விஇ சுகாதாரம் உள்ளிட்ட சகல தேவைகளையூம் நிறைவேற்றுவதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறௌம். உங்களின் எதிர்காலம் மட்டுமன்றி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கவூம் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
மக்கள் நலன் தொடர்பாக யார் சொல்வதையூம் நான் செவிமடுப்பேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உங்கள் பிரச்சினைகள் பற்றி என்னுடன் தொடர்ந்து பேசுகின்ற ஒருவர். ஏனையோர் 13 வது திருத்தம் பற்றி மட்டுமே பேசுவார்கள். எனினும் அமைச்சர் டக்ளஸ் மக்களின் பிரச்சினைகள் தேவைகள் பற்றி பேசுபவர்.
குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் சிலர் அவர்களின் சொந்தப் பிரச்சினை பற்றியே சிந்திப்பவர்கள் அவர்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளால் நாட்டைத் துண்டாட நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவ தில்லை.
நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள்இ நாம் ஒன்றாய் வாழ்வோம். ஒன்றாய் செயற்படுவோம்.
நாம் அனைவரும் இணைந்து எமது கிராமத்தையூம் இந்த நாட்டையூம் கட்டியெழுப்புவோம் எனவூம் ஜனாதிபதி தெரிவித்தார்

0 comments:
Post a Comment