இது குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-
"தெய்வத் திருமகள்" படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்த்தேன்.
ரொம்பவும் ரசித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இருந்தனர்.
அடுத்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க பேசி வருகின்றனர். அது இன்னும் முடிவாகவில்லை. அவருடன் “சிறுத்தை” படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால்ஷீட் இல்லாததால் நடிக்கவில்லை. கார்த்தியின் சகோதரர் சூர்யாவுடன் ”சிங்கம்” படத்தில் நடித்தேன். அப்படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது.
“சிங்கம்” படம் இந்தியில் ரீமேக் ஆகிறது, அதில் காஜல் அகர்வால் நடிக்கிறார், அப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்காக வருத்தம் இல்லை.
தெலுங்கு பட உலகம் தான் என்னை வளர்த்தது, எனவே அதோடு இணக்கமாக இருக்கிறேன்.
தெலுங்கு நடிகருடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன.
அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை, மக்கள் என்னுடன் நெருங்கி இருக்கிறார்கள், அவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும் என்றார். |
0 comments:
Post a Comment