நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரமன்

Tuesday, July 19, 2011


ரசிகர்களுக்கு பல சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்ரமன்  தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘இளமை நாட்கள்’.
படம் பற்றி அவர் கூறியதாவது:
இயக்குனர் பூபதி பாண்டியனின் தம்பி அர்ஜுன் பிரபுவுடன் சேர்த்து,  8 நடிகர்களும் 3 நடிகைகளும்  இதில் அறிமுகமாகிறார்கள்.
இதில் ‘தேநீர் விடுதி’ படத்தில் நடித்த ரேஷ்மியும் ஒருவர். மற்றொருவர் எனது படமான ‘ப்ரியமான தோழி’ யில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்வேதா.
இவர்களைத் தவிர  இன்னொரு பெண்ணும் அறிமுகமாகிறார்.
மற்றபடி என் படத்தில் தெரிந்த முகங்கள் யாரும் இல்லை.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார், பால்ராஜ் இசையமைத்திருக்கிறார், நா.முத்துக்குமார், பா.விஜய், தமிழமுதன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இதுவரை சொல்லாத காதலை இதில் சொல்லியிருக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வந்து 21 வருடங்களாகி விட்டது. இதற்கு முன் நான் இயக்கிய படங்களில் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்யச் சொல்லி பலர் வற்புறுத்துகின்றனர்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏற்கனவே செய்த விடயத்தை மறுபடியும் செய்வதில் ஈடுபாடு இருக்காது,  புதுப்புது கதையை தான்  இயக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets