பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்தால் நன்றாக இருப்போம்: ஜமைக்கா மக்கள் ஏக்கம்

Monday, July 18, 2011

பிரிட்டிஷ் காலனியில் இருந்திருந்தால் நல்ல நிலையில் இருந்திருப்போம் என ஜமைக்கா மக்கள் கருதுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கிளினர் என்ற ஜமைக்கா நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் 60 சதவீத மக்கள் பிரிட்டிஷ் காலனியை விரும்புபவர்களாக உள்ளனர். 17 சதவீதம் பேர் இந்த கருத்தை ஏற்கவில்லை.
அடுத்த ஆண்டு ஜமைக்கா 50வது சுதந்திர பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது. ஜமைக்காவில் தற்போது வறுமையும் குற்ற நிகழ்வுகளும் தீவிரமாகி உள்ளன.
ஜமைக்காவில் பத்தில் 6 பேர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி நாட்களை நினைவு கூர்கிறார்கள். நாட்டின் 50வது சுதந்திர தினத்தின் போது பிரிட்டிஷ் காலனியுடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ள ஜமைக்கா விரும்புகிறது என பிரதமர் ப்ரூஸ் கோல்டிங் கூறுகிறார்.
ஜமைக்கா தீவு 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி தனி நாடாக உருவெடுத்தது. ஜமைக்காவில் அரசியலமைப்பு மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கேட்க இது சரியான நேரம் என பிரதமர் கூறுகிறார்.
ஜமைக்காவில் புதிய தலைவரை எப்படி நியமிப்பது என்றும், பிரித்தானிய ஆலோசனை கவுன்சிலை அகற்றுவது குறித்தும் ஜமைக்காவில் அரசு தரப்பில் விவாதிக்கப்படுகிறது.
பிரித்தானிய ஆலோசனை கவுன்சிலுக்கு பதில் ஜமைக்காவில் இறுதி முறையீட்டிற்கு கோர்ட் உருவாகும் முறை குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசிக்கிறது.

0 comments:

IP
Blogger Widgets