சோமர் செட் அணியுடன் மோதும் இந்திய அணி பயிற்சி போட்டி: நாளை தொடங்குகிறது

Monday, July 18, 2011

இந்திய கிரிக்கட் அணி 4 டெஸ்ட், ஒரு ”டுவென்டி 20” போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21 ம் திகதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி கிரிக்கட் வரலாற்றில் 2000 வது போட்டியாகும். இதனால் இந்த டெஸ்ட் வரலாற்று சிறப்பை பெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி சோமர் செட் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் டவ்ன்டன் நகரில் நாளை (15 ம் திகதி) தொடங்குகிறது. இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அனைத்து தொடர்களையும் வென்றது. ஒரே ஒரு ”டுவென்டி 20” போட்டியில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும், 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத டெண்டுல்கர், காம்பீர், ஜாகீர்கான், யுவராஜ்சிங் போன்ற முன்னணி வீரர்கள் தற்போது அணியில் இணைந்து உள்ளனர். சேவாக் பாதியில் இணைந்து கொள்வார். இந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் மூலம் இந்திய அணி நல்ல அனுபவம் கிடைக்கும். டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-
டோனி (கப்டன்), டெண்டுல்கர், சேவாக், காம்பீர், டிராவிட், ரெய்னா, யுவராஜ் சிங், வி.வி.எஸ்.லட்சுமண், அபினவ் முகுந்த், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், முனாப் படேல், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த், பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, விர்த்திமான் சகா.

0 comments:

IP
Blogger Widgets