வெப்பரை ஆதரிக்கும் ரெட்புல் உரிமையாளர் டெட்ரிச்

Monday, July 18, 2011

கிராண்ட் பிறீஸ் கார்பந்தயத்தில் ரெட்புல் அணியின் அடுத்த சீசனிலும் மார்க் வெப்பர் இருப்பார் என ரெட்புல் உரிமையாளர் டெட்ரிச் மாடேஸ் சிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வீரரான வெப்பர் 2012 ம் ஆண்டிற்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் கிராண்ட் பிறீஸ் போட்டியின் போது வெப்பர் தனக்கு தரப்பட்ட உத்தரவுகளை கடைபிடிக்கவில்லை.
தனது அணியின் சகவீரர் செபாஸ்டியன் வெட்டலுக்கும் அவருக்கும் உரிய இடைவெளி விட்டே செல்ல வேண்டும் என கூறபட்டிருந்தது. அந்த ஆலோசனையை அவுஸ்திரேலிய வீரர் வெப்பர் புறக்கணித்தார். இதனால் அணியினர் எரிச்சலடைந்துள்ளனர்.
இதுகுறித்து வெப்பருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அணி முதல்வர் கிறிஸ்டியன் ஹார்னர் தெரிவித்துள்ளார். ரெட்புல் அணியில் வெப்பர் புகழ்பெற்ற வீரர். எங்களுடன் இருப்பது அவருக்கும் நன்றாக இருக்கிறது. மார்க் வெப்பர் எங்களுடன் தொடர்ந்து நீடிக்க புதிய ஒப்பந்தம் செய்வார் என ரெட்புல் உரிமையாளர் டெட்ரிச் மாடேஸ் சிட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets