உள்ளூராட்சிச் சபை தேர்தல் உணர்த்தும் செய்தி என்ன? - இதயச்சந்திரன்

Monday, July 18, 2011

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாய்ச் சின்னத்தில் யாராவது போட்டியிடு கிறார்களோவென்கிற சந்தேகம் எழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வீட்டு வாசல் கதவுகளில் நாய்களின் தலைகளை தொங்கவிடுவதில் சிலர் அக்கறை கொள்வதாக செய்திகள் கூறுகின்றன.


மிருக வதைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் புளு குரஸ் (Blue Cross) என்ற அமைப்பு இலங்கையில் இயங்குகிறதா? என்ற கேள்வி நியாயமானது போல் தெகிறது.

தேர்தலில் போட்டியிடுவோர் சுவரொட்டி கூட ஒட்டமுடியாத நிலையில் பிரசாரக் கூட்டங்களை நடத்தும் சிறிய உரிமைகளையும் இழந்து விட்டார்கள் தூங்கா இரவுகளோடு தமது வாழ்வு கழிவதாக கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதங்கப்படுகின்றார்கள். ஆகவே, வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை இழந்த நிலையில் வட, கிழக்கில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதனை தேர்தல்கள் கண்காணிக்கும் கபே அமைப்பு கூறித்தான் தெரிய வேண்டுமென்கிற அவசியமில்லை.

இப்போது சகல தவறுகளையும் சுட்டிக்காட்டும் இந்த சுயாதீன அமைப்புகள் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் எல்லாமே சுகமாகவும் நீதியாகவும் நடைபெற்றதாகச் சான்றிதழ் வழங்கும் சடங்கிற்குச் சாட்சியாக மாறிவிடுவார்கள்.

அதேவேளை, தீவுப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் தனது கட்சி வேட்பாளர்கள் திண்டாடுவதாக மாவை சேனாதிராஜா கவலையடைகிறார். பிறகெதற்குத் தேர்தல் என்கிற கேள்வியை கபே அமைப்பிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் கேட்கவேண்டும்.

சுதந்திரமாகத் தேர்தலில் போட்டியிடும் நிலை இல்லாவிட்டாலும் போட்டியில் பங்கு பற்றுவோமென கூட்டமைப்பினர் கூறுவது மக்களின் ஜனநாயக உரிமையினை மறுக்கும் ஆட்சிக்கு தாங்களே துணை போவது போலாகாதா?

இருப்பினும், தமிழர் தாயகத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் சபைத் தேர்தலில் ஊடாக சர்வதேசத்திற்கு இலங்கை அரசு சொல்லவரும் செய்தி என்ன என்பதை நோக் கினால், இடர்களையும் தாண்டி காலத்தின் தேவை உணர்ந்து தமிழ் மக்கள் ஓரணியில் ஒன்றுபட வேண்டிய நிர்ப்பந்தம் உணரப்படுகிறது.

உள்ளூராட்சிச் சபையின் அதிகாரங்களை கைப்பற்றுவதன் முலம் வட, கிழக்கு வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் இறைமையோடு கூடிய அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாது என்பதனைப் புரிந்து கொண்டாலும், தங்களுடைய அரசியல் தலைமையை சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் தமிழினம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று பேனரிவாத அரசியல் சக்திகள் உலகிற்கு பறை சாற்றுவதை தற்காலிகமாகவேனும் தடுக்க வேண்டும்.

இத்தேர்தலில் பெரும்பான்மையான சபைகளை அரசசார்புக் கட்சிகள் கைப்பற்றினால் கிடப்பில் போடப்பட்டுள்ள நாடாளுமன்ற தெவுக்குழுவானது உயிர்த்தெழுந்து இதுதான் தீர்வென்று எதையோ தமிழர்களின் தலையில் சுமத்திவிடும் அபாயமேற்படும்.

விடுதலைப்புலிகளை ஆயுதப் போரில் தோற்கடித்து வன்னி பெரு நிலப்பரப்பினை தமது ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டதாக தென்னிலங்கை மக்களுக்குச் செய்தி சொல்லும் அரசு, தமிழர் தாயகத்தின் அரசியல் தளத்தையும் அதன் தலைமையையும் கைப்பற்றி விட்டதாக இத்தேர்தல் ஊடாக சொல்ல விரும்புகிறது.

அதாவது, அரசியல் தீர்வொன்றினைக் காணுமாறு சர்வதேசம் கொடுக்கும் நெருக்கடிகளை திசை திருப்புவதற்கு தாயக அரசியல் தலைமையைக் கையகப்படும் தந்தி ரோபாய நகர்வில் அரசு முனைப்புக் காட்டு வதைப் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக அரசியல் தலைமை அல்ல என்று ஆட்சியாளர்கள் வலியுறுத்தும் சூத்திரத்தின் பின்புலம் இதுதான் இத்தேர்தலில் கூட்டமைப்பு தோற்கடிக்கப் பட்டால் நாடாளுமன்றத் தெவுக்குழுவே தமிழர்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பெரும் சக்தியாக உலகிற்கு இனங்காட்டப்படும்.

கூட்டமைப்பு குறித்து பல விமர்சனங்கள் மக்களுக்கு இருக்கலாம். அடக்குமுறை அதிகத்தால் மக்களை அணிதிரட்டி ஒத்துழையாமை இயக்கத்தை தலைமையேற்று நடாத்தப்போவதாக இரா.சம்பந்தன் நாடாளுமன்மு றில் முழங்கியதை தேர்தல் பரப்புரையாகவும் சிலர் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனாலும், இங்கு பேரினவாதச் சக்திகள் எனச் சாதிக்க முயல்கிறது என்பதனைப் புரிந்து கொள்வதே மிகமுக்கியமானது.

கடந்த வாரம் நெல்லியடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தமிழர்களின் யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மாவீரர் துயிலுமில்லங்களை அழித்த கையோடு முத்திரைச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னனின் சிலைமீதும் பேரினவாதத்தின் பார்வை படிந்துள்ளது. வாளேந்திய சங்கிலியனின் சிலையைக் கண்டவுடன் தென்னிலங்கை உல்லாசப் பயணிகள் சங்கடப் படுவதாக சிலர் விளக்கமளிக்கிறார்கள் வாளேந்திய சிலைகள், தேசிய நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையுமாயின், வாளேந்திய சிங்கக் கொடியும் அதேவிதமான சங்கடத்தை தமிழ் மக்களின் மனங்களில் உருவாக்குமென்பதை உணர வேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டு, கலாச்சார விழுமியங்களின் அடியழித்து, தேசிய நல்லிணக்கமென்கிற மாயமான்களை கட்டியிருக்க முடியாதென்பதை இவர்கள் உணரப் போவதில்லை.

இவை தவிர, இந்த ஏதேச்சதிகார அரசானது, வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நிதியுதவியில், சிறுபகுதியினையே, தமிழ் மக்களின் பிரதேசங்களில் செலவிடுகிறார்களென்று திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

கடந்த வருடம் நவம்பர், டிசெம்பர் மாதங்களில், வெள்ள அனர்த்தத்தால் பாதிபுற்ற 1.2 மில்லியன் மக்களிற்கான உடனடி நிவாரணப் பணிக்காக 3.8 மில்லியன் டொலர்களை உலகவங்கி ஒதுக்கியது. இதில் கிழக்கு மாகாணமே பேரழிவிற்கு உள்ளானது.

இதேபோன்று, கடந்த ஜூன் 30 ஆம் திகதியன்று, 20 வருட கடனடிப்படையில் 10 மில்லியன் டொலர்களை, உலக வங்கி வழங்க முன் வந்துள்ளது.

போரினால் பாதிப்படைந்த பிரதேசங்களின் இயல்பு வாழ்வு மீட்புக்காக இந்நிதி வழங்கப் படுவதாக உலகவங்கியின் அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, உலக வங்கியால் வழங்கப்படும் நிதியில் எத்தனை விழுக்காடு, தாயகப் பிரதேசத்தில் செலவழிக்கப்படுகிறது என்கிற சம்பந்தன் கேள்வியில் நியாயண்டு.

அதேவேளை, கடன் வழங்கும் உலக நிதி நிறுவனங்கள் யாவும், இலங்கை அரசின் மீது நெருக்கடிகளைக் கொடுக்கின்றன என்பதனையும் மறுக்க முடியாது.

12 இலட்சமாகவிருக்கும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை, 4 இலட்சமாகக் குறைக்குமாறு, உலகவங்கி அழுத்தம் கொடுப்பதாக, கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் டி.எம். ஜயரட்ண கூறியுள்ளார்.

அரச செலவீனங்களைப் குறைப்பதால், வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை மட்டுப்படுத்தலாம் என உலகவங்கி கூறும் அறிவுரையை ஏற்றால், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகக்கும் என்பது அரசிற்குத் தெரியும்.

வருடந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணத்தைக் கட்டுவதற்கு அரசு திண்டாடுவதை, உலகவங்கியும், அனைத்துலக நாணயநிதியமும் கவலையோடு நோக்குவதால், இத்தகைய அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

2010 ஆகஸ்ட் மாதம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விற்கு, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அநுர ஏக்கநாயக்கா வழங்கிய, எழுத்துலமான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பல விடயங்களை இங்கு கவனிக்க வேண்டும்.

தேசிய இனமுரண்பாடும். அதன் எதிர்விளைவான போரும். நாட்டின் பொருளா தாரத்தில் பாரிய பின்னடைவினை உருவாக்கியுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது.

1983 ஆண்டளவில், பாதுகாப்புச் செலவீனமானது, நாட்டின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 1.4 சதவீதமாக இருந்த தெனவும், தற்போது சராசரியான 4.32 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் 1984 இல், உள்ளூர் மொத்த உற்பத்தியின் 1.3 விழுக்காட்டினைக் கொண்டிருந்த வெளி நாட்டு நேரடி தலீட்டின் அளவு, 2001 2009 இல் 1.24 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றது. அத்தோடு, 1982 இல், 400,000 ஆக விருந்த உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை 2007 இல், 494,000 ஆக இருப்பதாகக் குறிப்பிடும் வர்த்தக சம்மேளன அறிக்கை, இதே காலப்பகுதியில் தாய்லாந்து நாட்டிற்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் அளவு 580 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒப்பிடுகிறது.

ஆகவே, போர்க்குற்ற விசாரணை, சனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட ஆவணம் மற்றும் ஜ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை போன்ற வற்றால், சர்வதேச இராஜதந்திர உறவில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளும் இலங்கை அரசானது, உல்லாசப்பயணிகளை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை வரவழைப்பதற்கும், வட, கிழக்கில் அரசியல் ஸ்திர நிலைமை உருவாகியுள்ளதாகக் காட்ட ற்படுகிறது என்று நம்பலாம்.

சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் குறைந்த பட்ச தீர்வினை, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெளிவாக உணரும் ஆட்சியாளர்கள், மக்கள் மத்தியில் அச்சவுணர்வினைத் தோற்றுவித்தோ அல்லது தங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே, அபிவிருத்தி ஏற்பட்டு, வடக்கில் வசந்தம் வருமென்கிற நம்பிக்கையை ஊட்டுவதன் ஊடாகவோ, தமிழர் அரசியல் தளத்தினைக் கைப்பற்றலாமென கற்பிதம் கொள்கிறார்கள்.

இவர்கள் வெற்றிபெற்ற அடுத்தகணமே, எல்லாமே தலைகீழாக மாறிவிடும்.

வடக்கையும், கிழக்கையும் இணைக்கக் கூடாதென்கிற பிரிவினைக் குரலும், 13 உம் தேவையில்லை, சமஷ்டியும் தேவையில்லை என்கின்ற தேசிய அமைப்புகளின் ஒன்றியக் குரலும், பலமாக ஒலிக்கத் தொடங்கும்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலை வர் குணதாச அமரசேகர வலியுறுத்துவது போன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் இரத் தாகி, புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகும்.

அதில் சுயாட்சி, சமஷ்டி, 13+ போன்று எதுவுமே இருக்காது பேச்சுவார்த்தைக்கான அவசியம் அற்றுப்போகும்.

0 comments:

IP
Blogger Widgets