நடிக்கக் கூடாத சில படங்களில் நடித்துவிட்டேன்: நமீதா

Wednesday, July 20, 2011


சினிமாவுக்கு வந்து நடிக்கக் கூடாத படங்கள் சிலவற்றில் நடித்துவிட்டேன். அந்தத் தவறை இப்போது உணர்கிறேன் என்கிறார் நமீதா.
கவர்ச்சியில் புது எல்லைகளைத் தொட்டவர், வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவு புகழைப் பெற்றவர் நமீதா தான்.
அவருக்காகவே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆரம்பி்க்கப்பட்டு, 6 மாதங்களில் அது மெகா ஹிட்டானதும் நமீதாவால் தான். தமிழில் இப்போதைக்கு வாய்ப்புகளைத் தவிர்த்து வரும் நமீதா, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த இரு மொழிகளிலும் தன்னை மையப்படுத்திய கதைகள் கிடைப்பதால் முன்னுரிமை அளிக்கிறாராம்.
ஹைதராபாதில் சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்தார் நமீதா. அப்போது அவர் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. அப்பா, அம்மாவுக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை. முதன் முறையாக ”சொந்தம்” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17. மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்த என்னைப் பார்த்துவிட்ட அப்பா சங்கடத்தோடு தலையிலடித்துக் கொண்ட காட்சி இன்னும் என் மனதில் அப்படியே நிற்கிறது.
சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமை தான் எங்கும் உள்ளது. அதற்கு சினிமாக்காரர்களும் ஒரு காரணம் தான். மறுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். நடிகைகளுக்கும் குடும்பம் உள்ளது. உறவினர்கள் இருக்கிறார்கள். அலுவலகம் போய் வருவது போன்ற ஒரு தொழில் தான் இதுவும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சினிமாவுக்கு வந்து இத்தனை காலங்களில் நடிக்க கூடாத சில படங்களில் நடித்து விட்டேன். அதை இப்போதுதான் உணர்கிறேன்.
பிரபலமாக இருப்பதால் சில தொல்லைகளும் இருக்கிறது. ஒரு முறை ரசிகர் ஒருவர் ஓடி வந்து என் கையை பிடித்தார். நான் பயந்து போய் கையை உதறினேன். பிறகு அந்த ரசிகர் எனது கையை தொட்ட அவரது கைக்கு முத்தம் கொடுத்தபடியே அங்கிருந்து ஓடினார். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படியும் வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.
தமிழ் தான் எனக்கு பெரிய வாழ்க்கையைக் கொடுத்தது. ஆனால் இன்றைக்கு வெறும் ஊறுகாய் மாதிரி கவர்ச்சி காட்சிகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் என் கால்ஷீட் கேட்கிறார்கள். எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுங்கள். அதில் கவர்ச்சியும் இருக்கலாம். என் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். அதுபோன்ற வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்.
கன்னடத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன என்றார்.

0 comments:

IP
Blogger Widgets