ஸ்ரேயாவை புகழ்ந்த ஜீவா

Wednesday, July 20, 2011


ஜீவா - ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் படம் "ரௌத்திரம்" ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தை கோகுல் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சீ.டி வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.

விழாவில் ஜீவா பேசியதாவது: ரௌத்திரம் கதை அப்பாவுக்கும் எனக்கும் பிடித்தது. இயக்குனர் கோகுல் திடமான சிந்தனை உள்ளவர்.
எந்த குழப்பமும் இன்றி நினைத்த மாதிரி படத்தை எடுத்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளன. என் திரையுலக வாழ்க்கையில் இது வித்தியாசமான படமாக இருக்கும்.
திரைப்படங்களில் அறிமுக காட்சிகள் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கதாநாயகர்கள் விரும்புவது உண்டு. ஆனால் இந்த படத்தில் எனது அறிமுக காட்சி ரொம்ப சாதாரணமாக இருக்கும். விறு விறுப்பான கொமர்சியல் படமாக இருக்கும்.
ஸ்ரேயா சிறந்த நடனக் கலைஞர். இந்த படத்தில் அவருக்கு மென்மையான வேடம். இயக்குநரும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சமமாக உழைத்து படத்தை எடுத்துள்ளனர்.
நடிகர்கள் ஆர்யா, ஜெயம்ரவி, நடிகை ஸ்ரேயா, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக்குமார், ராசுமதுரவன், ராஜேஷ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, தாணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

0 comments:

IP
Blogger Widgets