இங்கிலாந்து கிரிக்கட் அணி கப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் இந்தியாவுடன் கடந்த சுற்றுப் பயணத்தில் ஆடியபோது 4 முறை ஜாகீர்கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இந்த முறையம் இங்கிலாந்து கப்டனுக்கு நெருக்கடி தரலாம் என்ற அச்சம் இருந்தது. ஆனால் அந்தக் கவலையை ஸ்டிராஸ் குறைத்துள்ளார்.
இடதுகை ஆட்டக்காரர் கடந்த வாரம் சோமர்செட் அணிக்காக ஆடிய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 78 ரன்கள் மற்றும் 109 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு ஆண்ட்ரூ ஸ்டிராசை மிரட்டியதாக தெரியவில்லை.
ஜாகீர்கான் நல்ல பந்துவீச்சாளர். அந்த பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகிவிட்டோம் என ஸ்டிராஸ் நம்பிக்கை தெரிவித்தார். ஜாகீர்கான் பந்துவீச்சை பலமுறை பார்த்துவிட்டோம். மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாகவே ஆடுவோம் என ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.
ஜாகீர்கான் பந்துவீச்சு பிரச்சினை தராது: ஸ்டிராஸ் நம்பிக்கை
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment