வெய்னி ரூனி அடித்த ஹாட்ரிக் கோலால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 7-0 கோல் கணக்கில் அமெரிக்காவின் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை தோற்கடித்தது.
இந்த ஆட்டம் நட்பு ரீதியிலான ஆட்டம் தான் இருந்தாலும் அடுத்தடுத்து ரூனி அடித்த 3 கோல்கள் அமெரிக்க ரசிகர்களை மட்டுமல்ல எதிரணி வீரர்களையும் திக்குமுக்காடச் செய்தது.
பிரிமியர் லீக் கால்பந்து போட்டி தொடங்க இன்னும் 3 வாரம் உள்ள நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணி அமெரிக்காவில் பயிற்சி ஆட்டங்களை ஆடுகிறது. அந்த அணி சிகாகோ, நியூ ஜெர்சி, வாஷிங்டன் நகரங்களுக்கும் பயணிக்க உள்ளது.
பெர்குசனின் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை மைதானத்தில் இருந்த 67 ஆயிரம் ரசிகர்கள் பாராட்டினர். அந்த ரசிகர்களை ஏமாற்றாத வகையில் ஆட்டத்தின் 2 வது பாதியில் களம் இறங்கிய வெய்னி ரூனி 18 நிமிட நேரத்தில் 3 கோல்கள் அடித்தார்.
கால்பந்து: ரூனி ஹாட்ரிக்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment