மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திரிஷாவுக்கு திருமணம், மாப்பிள்ளை ரெடி என்று செய்தி வெளியாவதும், அவர் இல்லையில்லை அது பொய் செய்தி என மறுப்பதும் வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் இப்போது மேலும் ஒரு செய்தியும் விளக்கமும் வெளியாகியுள்ளது. திரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் மிகத் தீவிரமாக இருந்த அவரது அம்மா உமா, இரண்டு வரன்களைப் பார்த்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரை விரைவில் இறுதி செய்வார் என்றும் தெலுங்கு இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த இரு வரன்களில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் உண்டாம். இவரைத் தான் திரிஷா கல்யாணம் செய்வார் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திரிஷா இந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு திருமணம் என்றால் நிச்சயம் நான் அனைவருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது காதல் திருமணமாகவே இருந்தாலும். ஆனால் நான் பெற்றோர் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன். எப்போது என்பதை நான் தான் சொல்வேன். மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது என்றார். |
0 comments:
Post a Comment