முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். வாழ்த்துத் தெரிவிக்க வந்த காரியவாசகத்திடம் ராஜபக்ஷேக்கு கடிதம் அனுப்பிய ஜெயலலிதா.

Friday, July 22, 2011

ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு தகவல் ஒன்றை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவுக்கான ஸ்ரீலங்கா தூதர் பிரசாத் கரியவாசத்திடமே இத் தகவலைக் கூறியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா தூதர் நேற்றயதினம் (வியாழக்கிழமை) சென்னைக்கு வந்து தமிழக முதல்வரைச அவசரமாக சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.



ஸ்ரீலங்காவிலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் தமது சொந்த இடங்களில் மறுவாழ்வு பெறுவதை உங்கள் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே முதல்வர் ஜெயலலிதாவின் தகவல்.

முதல்வரின் இந்தத் தகவலை ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாகக் கூறிச் சென்றிருக்கிறார், ஸ்ரீலங்கா தூதர் பிரசாத் கரியவாசம்.

அத்துடன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் 3 முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர்.

ஸ்ரீலங்கா தூதர், தமிழக முதல்வருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், "எதற்காக இந்த திடீர் சந்திப்பு" என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த தூதர் கரியவாசம், "முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளேன். முதல்வருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷே என்னைப் பணித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றது, மே மாதம் நடுப்பகுதியில்! தூதர் காரியவாசம் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருப்பது, ஜூலை மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets