பிஸ்டோரியஸ் உலக மற்றும் ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தகுதி

Friday, July 22, 2011

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 24 வயது தடகள வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் உலக தடகளம் மற்றும் 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த வீரர் இத்தாலியில் நேற்று நடந்த தடகளத்தில் 400 மீற்றர் போட்டியில் 45.07 வினாடியில் ஓடி உலக போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வீரரின் இரண்டு கால்களிலும் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டவர்.
இந்த வீரர் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் 4 முறை தங்கம் வென்றுள்ளார். தென்கொரியாவில் உள்ள டேகு நகரில் ஓகஸ்ட் 27 ம் திகதி உலக தடகளப் போட்டி நடக்கிறது. இந்த உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே செயற்கை கால் வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் ஆவார்.
ஓஸ்கர் பிஸ்டோரியஸ் 11 மாத குழந்தையாக இருந்தபோது அவரது கால்களின் கீழ் பகுதிகள் அகற்றப்பட்டன. இந்த வீரர் 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு தகதி பெறவில்லை.

0 comments:

IP
Blogger Widgets