சர்வதேச அளவில் கிரிக்கட் அதி தீவிரமாக வளர்ந்து வருகிறது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் கிரிக்கட் காய்ச்சலும் எட்டி பார்க்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவான நிலையில் இந்த விளையாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாயும் புரள்கிறது. வீரர்கள் பல கோடியை ஆடியே சம்பாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் கிரிக்கட்டில் குறிப்பிட்ட அணி தான் வெற்றி பெறும் என்கின்ற சூதாட்ட பந்தயமும் ஆடுகளத்திற்கு வெளியே அரங்கேறி வருகிறது. சூதாட்டம் நடத்தி கோடியை பார்ப்பவர்கள் சில் வீரர்களை வளைத்துப் போட்டு போட்டி முடிவை தங்கள் எண்ணப்படி மேற்கொள்கிறார்கள்.
சூதாட்ட முடிவின்படி போட்டி முடிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் வலியுறுத்தியுள்ளார். அவர் லார்ட்சில் உலக கிரிக்கட் கொமிட்டியின் எம்.சி.சி. உறுப்பினர் என்ற முறையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
போட்டியில் முன்கூட்டியே முடிவை நிர்ணயிக்க சூதாட்ட பந்தயத்தை தடுக்க வீரர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை என வாக் வலியுறுத்தி உள்ளார். கடந்த எப்ரல் 7 ம் திகதி உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனைக்கு சென்றதையும் அவர் குறிப்பிட்டார். எம்.சி.சி. கிரிக்கட் தலைவர் ஜான் ஸ்டீபன்சனும் முதல்தர சோதனைகள் தேவை என்பதை ஒப்புக்கொண்டார்.
கிரிக்கட் போட்டிகளில் சூதாட்டத்தை தடுக்க உண்மை கண்டறியும் கருவி: ஸ்டீவ் வாக் வலியுறுத்தல்
Friday, July 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment