கவர்ச்சி களத்தில் குதித்துள்ள அஞ்சலி

Tuesday, July 19, 2011


அஞ்சலியும் கவர்ச்சிக் களத்தில் குதித்து விட்டார்.
இதுவரை கவர்ச்சிப் பக்கம் தலை சாய்க்காமல் இருந்து வந்த அவர், போட்டியின் கடுமையை உணர்ந்து அவரும் கவர்ச்சிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்.

”கற்றது தமிழ்” படம் மூலம் நடிகையாக அறிமுகமான அஞ்சலி, பின்னர் ”அங்காடித் தெரு” அஞ்சலியாக மாறிப் போனார். அந்த அளவுக்கு ”அங்காடித் தெரு” அஞ்சலிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.
இப்போது கை நிறையப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி, கவர்ச்சிக்கும் வழி திறந்து விட்டுள்ளார். இதுவரை கவர்ச்சியாக நடிக்க அவர் ஒத்துக் கொண்டது கிடையாது. அது தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று கூறி வந்தார். ஆனால் தற்போது கதையுடன் கூடிய கவர்ச்சி காட்ட தனக்கு தயக்கம் இல்லை என்று கூற ஆரம்பித்துள்ளாராம்.
ஏகப்பட்ட நாயகிகளின் வருகை, பல புதுமுகங்களின் குவியல் என போட்டி கடுமையாக இருப்பதால் சினிமாவில் நிலைத்திருப்பதற்காக இந்த கவர்ச்சி முடிவுக்கு வந்துள்ளாராம் அஞ்சலி.
கவர்ச்சியாக நடிக்க தான் தயாராக இருந்தாலும் கூட கதையம்சத்துடன் கூடிய படங்களில் மட்டுமே தொடர்நது நடிப்பேன், வெறும் கவர்ச்சியை மட்டும் நம்பி நடிக்க மாட்டேன் என்றும் அஞ்சலி கூறுகிறார்.

0 comments:

IP
Blogger Widgets