இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்து வரும் வித்யா பாலன், எந்த வகையான உடையலங்காரமும் தனக்கு ஓ.கே..தான் என்று கூறியுள்ளாராம்.
ஒரே ஒரு நிபந்தனையுடன். அந்த நிபந்தனை, ”ஸ்லீவ்லெஸ்” மட்டும் கூடவே கூடாது என்பதாம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை ”டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகிறார்கள். இதில் சில்க் வேடத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன்.
இதற்காக கவர்ச்சிகரமான ஆடைகளிலும் இவர் படத்தில் காட்சி தருகிறார். தற்போது ஹைதராபாத்தில் சூட்டிங் நடந்து வருகிறதாம். படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது ஆடை வடிவமைப்பாளர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம் என்ன மாதிரியான ஆடை வடிவமைப்பை கொடுத்தாலும் பரவாயில்லை, எனக்கு ஓ.கே.தான். ஆனால் ஸ்லீவ்லெஸ் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளாராம் வித்யா.
ஸ்லீவ்லெஸ் போட்டால் தனது கைகள் பட்டவர்த்தனமாக தெரியும். அதை தான் விரும்புவதில்லை என்கிறார் வித்யா பாலன்.
சில்க்குக்கு இணையாக இதுவரை யாரையும் திரையுலகம் கண்டதில்லை. அந்த இடத்தை வித்யா பாலன் நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். |
0 comments:
Post a Comment