ஈழம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு புகழேந்தி தங்கராஜை அறிமுகப்படுத்த தேவையில்லை.
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த நேரத்திலெல்லாம் தமிழகத்தில் ரத்த கண்ணீர் வடித்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தவர்களின் படையில் முதல் ஆளாக நிற்பவர் இவர். இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாகவே இந்த விஷயத்தில் தன் பணியை அயராது செய்து வருகிறார் இவர். அதற்கு உதாரணம் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற படம். தமிழகத்தில் சிகிச்சைக்காக வந்திருக்கும் ஈழ இளைஞன் ஒருவனை பற்றிய கதை அது. அந்த ஒரு காரணத்திற்காகவே தணிக்கை துறையினரோடு ஒரு மல்லுக்கட்டியவர்தான் இவர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சத்யராஜ், சங்கீதா நடிக்கிறார்கள். இவர்களை தவிர முக்கிய ரோலில் சீமானும் நடிக்கிறார். இவர்களில் சத்யராஜும், சீமானும் இலங்கை பிரச்சினை குறித்து எப்போதும் குரல் கொடுக்கக் கூடியவர்கள் அல்லவா? படமும் அப்படிதான் உருவாகிக் கொண்டிருக்கிறதாம்.
இலங்கை ராணுவத்தை சேர்ந்த அரக்கர்கள் பதிமூணு வயது சிறுமியை கற்பழித்துவிடுகிறார்களாம். அந்த பெண்ணின் அம்மா ஏதோ ஒரு வேகத்தில் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுகிறார். அதன்பின் அந்த குடும்பத்திற்கு நேர்கிற அச்சுறுத்தலும், மொத்த குடும்பமும் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்வதுமாக செல்லுமாம் கதை.
இதில் சீமான் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அக்கிரமத்தை நிஜமாகவே தட்டிக் கேட்கும் இன்ஸ்பெக்டராக சீமான் என்றால், வசனங்கள் எப்படியிருக்கும் என்பதை யோசித்துக்கொள்ளுங்களேன்… ஈழ பிரச்சினையை தமிழகத்தில் வியாபாரமாக்கிவிட்டார்கள். எனக்கு தெரிந்தவரை உள்ளப்பூர்வமா, உணர்வு ரீதியா போராடுறது நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான்னு நாலு பேர் மட்டும்தான். இந்த உண்மை எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரியும் என்று கூறியிருக்கிறார் பாரதிராஜாவும். கருப்புச் சட்டைக்கேத்த காக்கிச் சட்டைதான்!
இன்ஸ்பெக்டரான சீமான்! “உச்சிதனை முகர்ந்தால்” பாடல் வெளியீட்டு விழா (வீடியோ இணைப்பு)
Monday, July 18, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
3:43 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment