அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில தலைநகர் அட்லான்டாவில் உள்ளது "ஹைலேண்ட்" பேக்கரி. இங்கு தலைமை டிசைனிங் கலைஞராக இருப்பவர் கரன் போர்ட்டலியூ என்ற பெண்.
பேக்கரி என்றால் வழக்கமான பிஸ்கட், இனிப்பு பலகாரங்கள் தான் தயாரிக்க வேண்டுமா என்று இவர் வித்தியாசமாக சிந்தித்ததன் விளைவு மிகச்சிறந்த கேக் சிற்பியாக அமெரிக்கா முழுக்க பிரபலமாகி இருக்கிறார்.


மனித உருவங்கள், கேலிசித்திர கதாபாத்திரங்கள், விலங்கு, பறவை ஆகியவற்றை சித்தரித்து ஆளுயர கேக் உருவாக்குவது இவருக்கு அல்வா சாப்பிடுவது போல.
சற்று கவனக்குறைவாக வெட்டினாலே துகள் துகளாக சிதறிவிடும் ஸ்பாஞ்ச் கேக்கை வைத்து பல்வேறு சிற்பங்கள் படைத்து அசத்துகிறார். இத்தனைக்கும் கேக் தயாரிப்பில் அவர் பிரத்யேக பயிற்சி எதுவும் பெற்றதில்லை.



இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: 2005ல் தோழி ஸ்டாசி திறந்த பேக்கரி தான் இது. எதிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பது என் குணம்.
பல வண்ணங்களில் சிற்பம் போல கேக் உருவாக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு. அமெரிக்காவில் தற்போது ஹாலிவுட் நடிகர், நடிகைகள், வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் என் படைப்புகள் கட்டாயம் இடம்பெறுகிறது என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.
கேக்கில் பல வித வடிவங்களை செய்து அசத்திய பெண்(படங்கள் இணைப்பு)
Monday, July 18, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
3:44 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment