அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராஸ் ஆகியோரை கொலை செய்ய பின்லேடன் சதித்திட்டம் தீட்டியிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பின்லேடன் தங்கி இருந்த போது அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்போது அங்கு இருந்த ஆவணங்களை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது.
இந்த ஆவணங்களை எல்லாம் அமெரிக்க ராணுவம் பரிசோதித்த போது அதில் சில ஆவணங்கள் அவன் ஒபாமாவையும், தளபதி பெட்ராசையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி இருந்ததை காட்டிக்கொடுத்தன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதியில் விமானத்தில் ஒபாமாவும், பெட்ராசும் பயணம் செய்த போது அந்த விமானத்தை தகர்த்து அழிக்க அவன் திட்டமிட்டு இருந்தான் என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்துவதற்கான குழுவில் யார் யார் இடம் பெறுவது என்பதில் அவருக்கும், அவரது உதவியாளர் அட்டியா அப்துல் ரகிமான் ஆகியோருக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒபாமாவை கொல்ல ஒசாமா சதித் திட்டம்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment