பிரிட்டன் மக்களிடம் மன்னிப்பு கோரினார் முர்டோக்

Monday, July 18, 2011

பெரும் ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான முர்டோக் பிரிட்டனில் அவரது பத்திரிகையான நியூஸ் ஆப் தி வேர்ல்ட் புரிந்துள்ள தவறுகளுக்காக பிரிட்டிஷ் மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

தம்மால் இழைக்கப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்னிப்பு கோரிக் கொள்வதாக இன்றைய செய்தி நாளிதழ்களில் "வீ ஆர் சொர்ரி" என்ற தலைப்பில் தனது கையொப்பத்துடன் வெளியான தொடர் அறிவிப்புகள் மூலம் ரூப்பர்ட் முர்டோக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் அதிகம் விற்பனையாகும் செய்திப் பத்திரிகையான அவரது நியூஸ் ஆப் தி வேர்ல்ட் ஆயிரக்கணக்கான மக்களின் தொலைபேசித் தகவல்களை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளதன் பின்னணியில் அவர் இந்த மன்னிப்புக் கேட்கும் படலத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பிரபல நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என்ற அளவோடு மட்டுமன்றி ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் படைவீரர்களின் குடும்பங்கள், கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பள்ளிச் சிறுமி போன்ற பல விதமானவர்களின் தகவல்களை நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை திருடியது.
ரூப்பர்ட் முர்டோக் தனது கடிதத்தில் கைத்தொலைபேசிகளின் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க மேலதிக நடவடிக்கைகளை நியூஸ் இன்டர்நேஷனல் எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவின ஊழல் விவகாரங்களை வெளிக்கொணர்ந்ததற்காக பழிவாங்கும் விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளின் போக்கு அமைந்துள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை எச்சரித்துள்ளது.

0 comments:

IP
Blogger Widgets