அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தரவு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு தரம் குறைவான பெற்றோல் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 20 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுக்கான கொடுப்பனவை உடனடியாக இடைநிறுத்துமாறு பொற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொற்றோலிய வளத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றின்போதே அமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பெற்றோல் பாவனையால் வாகனங்கள் பழுதடையும் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்நது அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் மூவர் அடங்கிய குழுவொன்றறை நியமித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment