இலங்கை நிர்வாக சேவை பயிற்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!

Monday, July 18, 2011

இலங்கை நிர்வாக சேவையைச் சர்ந்த 140 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி நெறிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞயிற்றுக்கிழழை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர்கள் தங்களுக்குரிய பயிற்சிக்கு தயார் நிலையில் வந்திருந்தனர். பயிற்சி ஆரம்ப நிகழ்வினை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி ஆம்பித்து வைத்துள்ளதுடன் இவர்களது கடமைகளைப்பற்றி அவர்களுக்கு தெரிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க- யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. ரூபினி வரதலிங்கம்- வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஆ.ரங்கராஜா மற்றும் யாழ்.பிரதேச செயலர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
தமது ஒரு மாத கால பயிற்சியின் போது இவர்கள் தமிழ் மொழியைக் கற்பதுடன் தமிழ் மக்களுடைய கலை கலாசாரப் பண்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ளவுள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets