பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை காப்பாற்றிய பெண்(வீடியோ இணைப்பு)

Saturday, July 16, 2011

சீனாவில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை வழியில் சென்று கொண்டிருந்த பெண் தாவிப் பிடித்து காப்பாற்றினார்.

சீனாவின் கிழக்கில் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ளது ஹாங்லு. இங்கு 31 வயது வு ஜூபிங் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஒரு குழந்தை ஊசலாடியபடி கீழே விழுந்து கொண்டிருந்ததை கவனித்தார்.









காலில் அணிந்திருந்த செருப்பை தூக்கி விசிறி விட்டு ஓடிச் சென்று கீழே விழுந்த குழந்தையை இருகரங்களால் தாங்கிப் பிடித்தார். குழந்தை அவரது கையில் விழுந்து தவறி புல் தரையில் விழுந்து காயமடைந்தது.

இதில் அப்பெண்ணின் இடது கை உடைந்தது. குழந்தையும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இக்குழந்தை கீழே விழும் போது வீட்டில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் ஜின் டெங்பெங் கூறுகையில்,"உயிரை பணயம் வைத்து குழந்தையை அப்பெண் காப்பாற்றி உள்ளார். அவர் தலையில் அல்லது இடுப்பில் அக்குழந்தை விழுந்து இருந்தால் அப்பெண் பக்கவாதத்திற்கு தள்ளப்பட்டு இருப்பார்" என்று தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets