ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச ஹோட்டலை மனித வெடிகுண்டுகளும் துப்பாக்கி ஏந்திய நபர்களும் தாக்கினர். அவர்களை வீழ்த்துவதற்கு நேட்டோ ஹெலிகாப்டர்கள் அழைக்கப்பட்டன.இரண்டு ஹெலிகாப்டர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 3 தலிபான்கள் கொல்லப்பட்டனர். காபூல் சர்வதேச ஹோட்டலில் நேற்று இரவு தலிபான் தீவிரவாதிகளுக்கும் நேட்டோ படையினருக்கும் இடையே 5 மணி நேரம் மோதல் நடந்தது. இதில் தீவிரவாதிகள் அல்லாத இதர 7 பேரும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் தாக்கிய ஹோட்டல் மேற்கத்திய நாட்டவர்கள் தங்கும் பிரபலமான இடமாகும். தங்கள் அமைப்பினரே தாக்குதல் நடத்தியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இன்று அதிகாலை ஹோட்டலில் இருந்து தீப்புகை கடுமையாக வந்து கொண்டு இருந்தது.
உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சித்திக் கூறுகையில்,"இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் கொல்லப்பட்ட பொது மக்களில் 7 பேரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்" என்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஹோட்டலின் அறைகளில் இரவு உணவு சாப்பிட்ட போது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. ஒரு மனித வெடிகுண்டு நபர் தனது உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் பீதியில் அலறி ஓடினர். ஹோட்டல் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஹோட்டல் மேல் தளப்பகுதிகளில் இருந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், ராக்கெட் உந்துதல் குண்டுகள், ஏ.கே.47 போன்ற அதி நவீன துப்பாக்கிகளை வைத்து இருந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதே போன்று 2008ம் ஆண்டு தலைநகர் செரினா ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
0 comments:
Post a Comment