நான் தவழ்ந்து, வளர்ந்த ராஜாக்கூர் - மதுரை மாவட்ட மண்ணை, சென்னை வந்த சினிமாவில் நடிகனாக வாழும் போது சொர்க்கமாக நினைக்கிறேன்.
ஊரில் இருந்த போது, நடிகர் திலகம் சிவாஜியின் தெய்வ மகனை ரசித்துள்ளேன். என் இளமை கால கட்டத்தில் நடிகை நதியா தான் எனக்கு கனவு கன்னியாக இருந்துள்ளார்.
கொலிவுட்டில் நடிக்க வந்த பிறகு, ”வெண்ணிலா கபடிக்குழு” படத்திற்காக பட்டினி கிடந்து செய்த புரோட்டா கொமெடியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அம்மா கையால் பழைய சாப்பாடு, வறுத்த பச்சை மிளகாயோடு சாப்பிடுவது தான் எனக்கு அமிர்தம்.
என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத நபர் ”வெண்ணிலா கபடிக்குழு” பட இயக்குனர் சுசீந்திரன் தான். சினிமாவில் விஷ்ணு, விமல் இருவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். நண்பர்களோடு நேரம் செலவிடுவது, எனக்கு பிடித்தமான பொழுது போக்கு.
”தல” அஜித் பாராட்டியது எனக்கு உற்சாகம் தந்துள்ளது என்கிறார் கொமெடியன் சூரி. |
0 comments:
Post a Comment