சேரனை கொமெடி படம் எடுக்க சொன்ன அமீர்

Friday, July 22, 2011


”களவாணி” சற்குணம் இயக்கிய ”வாகை சூட வா” படத்தின் இசை வெளியீட்டு திருவிழா நடைபெற்றது.
அப்போது இயக்குனர் அமீர், இயக்குனர் சேரனுக்கு கோரிக்கை வைத்ததை பற்றி கொலிவுட்டில் இன்றளவும் பரபரப்பாக பட வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
இயக்குனர் எஸ்.ஏ.சி, பாரதிராஜா, பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, வசந்த், தங்கர் பச்சான், ஜெகநாதன், வெற்றிமாறன், பிரபு சாலமன், விஜய், சிம்பு தேவன், பாண்டிராஜ், சுசீந்திரன் ஆகிய கொலிவுட் இயக்குனர்களுடன் வைரமுத்து, அறிவுமதி, ராதிகா சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமய்யா என திரையுலகினர் கூடியிருந்தனர்.
படத்தில் பணியாற்றிய கமெராமேன் ஓம் பிரகாஷ், இசை அறிமுகம் ஜிப்ரான், விமல், இனியா, இயக்குனர் சற்குணம் ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார்கள்.
அப்போது, கைப்பேசியில் நண்பனிடம் பேசுவதைப்போல பாவனை செய்து, படத்தை பற்றி சிலாகித்து இயக்குனர் சேரன் பேசவும், பலத்த கரகோஷம் அள்ளியது. இவரைத் தொடர்ந்த இயக்குனர் அமீர் சேரனை கொமெடி படம் ஒன்றை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.

0 comments:

IP
Blogger Widgets