பேச்சு நடத்த இயக்குநர் அமீர் தலைமையில் குழு தேர்வு

Sunday, July 24, 2011


'பெப்ஸி' தொழிலாளர்கள் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இயக்குநர் அமீர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
'பெப்ஸி' சங்கத்தில் திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களது சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே, 'பெப்ஸி' தலைவராக இருந்த வி.சி.குகநாதன் தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகினார்.
அவருடைய ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து, 'பெப்ஸி' அமைப்பின் தலைவராக எம்.ஏ. ராமதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமீர் தலைவர்: நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்து வரும் 'பெப்ஸி' தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக இயக்குநர் அமீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் பெப்ஸி அமைப்பின் எம்.ஏ.ராமதுரை, செயலாளர் ஜி.சிவா உள்பட 18 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக, இந்தக் குழு தயாரிப்பாளர் சங்கத்துடனும், பிலிம் சேம்பருடனும் பேச்சுவார்த்தை நடத்தும். இந்தத் தகவலை பெப்ஸி அமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.சிவா தெரிவித்துள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets