கிரிக்கட் உலகின் நவீன பிராட்மேன்: சச்சினை புகழ்ந்த லாரா

Thursday, July 21, 2011

கிரிக்கட் உலகில் இந்தியாவின் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சின், நவீன பிராட்மேனாக திகழ்கிறார் என முன்னணி வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் கப்டன் டோனி, ”கிழக்கும், மேற்கும் சந்திக்கின்றன” என்ற விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். லண்டனின் ”ஹில்டன் பார்க்” என்ற இடத்தில் நடந்த இந்த விருந்தில் உலகின் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கப்டன் லாரா, சச்சின் குறித்து கூறியது, இந்திய வீரர் சச்சின், 16 வயதில் கிரிக்கட் விளையாடத் துவங்கினார். தற்போது 38 வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இவரைப் போல சிறந்த வீரரை இதுவரை கண்டதில்லை. சச்சின் தான் உலகின் சிறந்த வீரர். லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின், 100 வது சதம் அடிக்க இருப்பதை நேரில் காண உள்ளேன்.

0 comments:

IP
Blogger Widgets