இந்தியாவின் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சினை இங்கிலாந்து தொடரில் 100 வது சதமடிக்க விடமாட்டோம் என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸில் தொடங்குகிறது. சச்சின் சர்வதேச கிரிக்கட்டில் தனது 100 வது சதத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்த நிலையில் ஸ்வான் மேலும் கூறியது, இந்தப் போட்டியில் சச்சினை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே விளையாடுவது மிகவும் ஆபத்தானது.
நவீன காலத்தில் சச்சின் மிகச்சிறந்த வீரர் தான். அதுபற்றி அவருடைய சாதனைகளே சொல்கின்றன. இந்திய அணியில் சச்சின் மட்டுமின்றி நிறைய முன்னணி வீரர்கள் உள்ளனர். அதனால் அவரை மட்டும் இலக்காக வைத்து விளையாடினால் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி ரன் குவித்துவிடுவார்கள் என்றார்.
சச்சினின் 100 வது சதம் குறித்துப் பேசிய ஸ்வான், அவர் கடந்த காலங்களில் லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக விளையாடியதில்லை. பல காலங்களுக்கு முன்பே அவருடைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து உள்ளேன். ஆனால் இப்போதும் அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இப்போது 100 வது சதத்தை அடிக்கக் காத்திருக்கிறார். ஆனால் அதற்கு அவர் இன்னும் 6 அல்லது 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம் என்றார்.
டோனி குறித்துப் பேசிய ஸ்வான், அவர் மற்ற வீரர்களை விட மிக முக்கியமான வீரர். முன்வரிசையில் களமிறங்கி விளையாடினால் எதிரணிக்கு அபாயகரமான துடுப்பாட்ட வீரராக இருப்பார் என்றார்.
இங்கிலாந்து தொடரில் சச்சினை சதமடிக்க விடமாட்டோம்: கிரீம் ஸ்வான்
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment