இலங்கைக்கு வெளியே வசிக்கும் நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு மட்டும் - மிக அந்தரங்கமானது

Thursday, July 21, 2011

பயங்கரமான பொறிக்குள் தமிழினம் - உள்ளுராட்சித் தேர்தல் 23-07-2011
80000ற்கு மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்து பலரைச் சித்திரவதை செய்து அவமானப்படுத்தி கற்பழித்து கோரமான குற்றச் செயல்கள் புரிந்து விட்டு வெற்றி எக்களிப்பில் என்ன செய்வது என்ன பேசுவது என்பதற்கு எல்லையே தெரியாமல் வடக்கு கிழக்கு மக்களை மேலும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி அவர்களை எல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு தகுந்த ஆப்பு வைத்தது போல் ஐ.நா. அறிக்கையும் சனல் 4 ஒளிப்படமும் வெளிவந்தமை எல்லோர் மனதிலும் ஒரு ஆறுதலைத் தந்திருக்கும்.

ஆனால் அதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால் இந்த இரண்டு ஆவணங்களில் இருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது சாதகமான பலன் கிடைக்க வேண்டுமானால் அதனோடு கூடவே உருவாக்கப்பட்டுள்ள மேலும் ஒரு முள்ளிவாய்க்காலை நாம் தாண்டியாக வேண்டிய பயங்கரமான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை என்ன? முப்பது ஆண்டு காலமாக சகல வழிகளிலும் மக்களுக்குள்ள நல்லாற்றல் பண்புகள் மூலவளங்கள் எல்லாவற்றையும் பறித்துவிட்டு சகலவற்றிற்கும் தங்கிவாழ்கின்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உதவியின்றி அனுமதியின்றி எதையும் செய்யவும் முடியாது பெறவும் முடியாது. அவர்கள் உங்களுக்கு இதைச் செய்வதற்கு போதிய ஆற்றல் இல்லை நிறுவனங்கள் இல்லை நாங்கள் உதவி செய்கின்றோம் என்று இங்கு வந்து கூற நீங்களே இந்த உதவியைப் பெரு மனதோடு செய்து தந்தீர்கள் நீங்கள் நீடுழி வாழ்க என்று கூறுகின்ற ஒரு பரம்பரையே இங்கு உருவாகிவிட்டது. பருப்புக்கும் அரிசிக்கும் அங்கலாய்த்து ஓட வைத்ததில் இருந்து படிப்படியாக அரசாங்கமும் அரசியல்வாதிகளும் எதைக் கொடுத்தாலும் அதற்கு நன்றித் துதிபாடக் கூடிய மாபெரும் கூட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்கட்கு அதற்கு அப்பால் சிந்தித்து தமது பிறப்புரிமையை இழந்து நிற்கின்றோம் இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக்கப்பட்டுவிட்டோமே என்றெல்லாம் சிந்திக்கத் தெரியவில்லை. ஆக அரசாங்கம் செய்வது சரி என்று கூறி ஆதரிக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டார்கள். இந்தச் சிந்தனையை மாற்றுவதற்குரிய முயற்சிகள் யாவும் முறியடிக்கப்படுகின்றன.
இத்தகைய ஒரு சூழலில் யுத்தக் குற்றத்திலிருந்து விடுபடுவதற்கு எதையும் செய்யத் தயார் என்றாகிவிட்ட நிலையில் மகிந்த அரசானது நிரந்தரமான முறையில் அதில் இருந்து தப்புவதற்கு வியூகத்தை வகுத்துள்ளது விசாரணைகளை வரவிடாது தடுத்துவிட்டால்தான் இது முடியும்.

இதற்கான சர்வதேச மட்ட முயற்சிகளின் பலனில் நம்பிக்கை இழந்த நிலையில் தமிழ் மக்களின் நிர்ப்பந்த ஒப்புதலைப் பெற்று உலகத்திற்குப் பிரகடனப்படுத்த வியூகத்தை வகுத்துள்ளது. தமிழ் மக்கள் மகிந்த அரசுக்கு ஆதரவொன்றினைத் தெரிவிப்பதன் மூலம் அதனை உலகத்திற்குக் காட்டி தமிழ் மக்களே கூறுகின்றார்கள் பின்பு உங்களுக்கு இதில் என்ன வேலை? உண்மையில் புலிகளின் கைக்கூலி பெற்றவர்களே ஐ.நா. அறிக்கையினையும் சனல் 4 காணொளிகளினையும் தயாரித்தார்கள் என்று கதையைத் திசைதிருப்பலாம்.

இதனை இலக்காகக் கொண்டு 23-07-2011 அன்று நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் யாவரும் அரசாங்க சார்புக் கட்சிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறுவதற்கான திட்டத்தை அரசாங்கம் தீட்டியுள்ளது.

இந்த திட்டத்தின் பலனாக அரசாங்கத்திற்கு பின்வரும் நன்மைகள் ஏற்படுமென கணக்கிடப்பட்டுள்ளது.

1. ஐ.நா. அறிக்கையையும் சனல் 4 காணொளிகளையும் தயாரித்தவர்கள் உண்மைக்குப் புறம்பான விதத்தில் செய்திகளை திரித்து இந்த அறிக்கைகளைத் தயாரித்துள்ளார்கள்.

உண்மையில் தமிழ் மக்கள் தம்மைப் புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்தமைக்காக மகிந்த அரசுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று உலகிற்கு காட்டுவது.

2. பயங்கரவாதிகளின் கோரிக்கைகளை முன்வைப்பவர்களும் பயங்கரவாதிகளே என தீர்ப்பளித்து TNA யினை மக்கள் துரத்தி விட்டார்கள். அவர்கள் LTTE பயங்கரவாதிகள் கேட்டதையே பேச்சுவார்த்தையின் போது கேட்டபடியால் மக்கள் அவர்களை ஒதுக்கிவிட்டார்கள். எனவே உடனே அவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டும் என்பதற்கான நியாயத்தினைப் பெற்றுக் கொள்ளல்

3. TNA தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை என்று தீர்ப்பளித்து பேச்சுவார்த்தைக்கு சகல கைக்கூலிகளையும் அழைத்தல் தீர்ப்பைத் திணித்தல்.

நாளாந்தம் விமானங்களிலும் பல வாகனங்களிலும் வருகைதந்து ஒவ்வொரு பிரதேச சபைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்களாக சிரேஸ்ட அமைச்சர்களை நியமித்து கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட தேர்தல் உத்தி நிபுணர்கள் எல்லோரும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள். அரச பணம் சொத்துக்கள் உத்தியோகத்தர்கள் எல்லாம் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

ஒரு மாபெரும் யுத்தமுனைப்புடன் இது நடைபெறுகின்றது. அத்தனை சிரேஸ்ட அமைச்சர்களும் அடியாட்களும் இறக்கப்பட்டு நாட்டின் தலைவிதியே இந்த வடபகுதி பிரதேச சபை தேர்ததலில் தான் தங்கியுள்ளது என்றமாதிரி சகல விடயங்களும் செய்யப்படுகின்றன. தமிழ் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டு இப்போது வந்து பிச்சை போடுகிறார்கள். ஆதிவாசிகளுக்கு சப்பாத்து சேலை புத்தகம் சைக்கிள் பாதை பள்ளிக்கூடக் கட்டிடம் எப்பவற்றைக் கொடுப்பது போல கொடுக்கின்றார்கள். அத்துடன் பல இடங்களில் ஜனாதிபதியின்
கட்சியை வெல்ல வையுங்கள் அதன் பிறகு வந்து இவற்றைத் தருகிறோம் என்று கூறுகின்றார்கள்.

யாரும் எதுவும் வெளிப்படையாகக் கூறமுடியாது. மாற்று வேட்பாளர்களின் பிரச்சாரம் கடுகடுப்பாக கண்காணிக்கப்படுகின்றன. மறைமுகமாக எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அரசாங்க
உத்தியோகத்தர்கள் தாங்கள் சொன்னபடிதான் செய்யவேண்டுமென கைக்கூலிகள் கூறுகின்றார்கள். உணவுப் பொருட்கள் பணம் கடன்கள் கணனிகள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வீதிகள் பள்ளிக்கூடக் கட்டிடங்கள் போன்றன திடீரென வழங்கப்படுகின்றன.

மக்கள் பாவம் எங்கே யார் என்னத்தைத் தருவார்களோ எனக் காத்திருந்து இவற்றைப் பெறுகின்றார்கள். அவர்கள் தானே எல்லாத்தையும் தருகின்றார்கள். TNA என்னத்தைத் தந்தது
என்று கேட்கின்றார்கள். அடிமையாக இருப்பதில் தவறேதுமில்லை எனக் கூறுகின்றார்கள்.

இவ்வளவு கொடூரமான முறையில் அவமானப்படுத்தி குற்றுயிர் குறையுயிர் என்றில்லாமல் கொழுத்தி எல்லா அழிவுகளையும் செய்து விட்டு வெட்கமில்லாமல் வந்து அம்மணமாக நின்றுகொண்டு உலக அரங்கில் தாங்கள் உத்தமர்கள் என்று உரத்துக் கூறும்படி எங்களைக்
கேட்கின்றார்களே என்று சிந்திக்க முடியாத அளவிற்கு சுயநலம் படர்ந்துவிட்டது.

இது ஏன் ஏற்பட்டது என்பதற்கு முக்கியமான ஒரு காரணம் இந்த மக்களுக்கு நிதானமாக சிந்திக்க அவகாசம் கிடைக்காத அளவிற்கு நிர்ப்பந்த நிலைகள் உருவாகியதும் சரியான கருத்துக்கள்
அவர்களை சென்றடையவோ அக்கருத்துக்களை சுதந்திரமாக உருவாக்கவோ முடியாத நிலைமை உருவானமையுமாகும். இந்த நிலையில் ஐ.நா. அறிக்கை சனல் 4 ஆவணங்கள் அரசுக்கு ஏற்படுத்தியுள்ள நெருக்கடியைப்பற்றியோ அதனோடு தமிழ் வரக்கூடிய
அதுவும் ஒரு முறை மட்டுமே வரக்கூடிய வாய்ப்புக்களைப் பற்றியோ ஓரளவுக்கேனும் மக்கள் செய்த தியாகங்களுக்குரிய தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் உருவாக்க முடியும் என்பதைப் பற்றியோ எல்லாம் சிந்திக்க அவர்களால் முடியாது. இந்தச் செய்திகள் மக்களைச் சென்றடையாத வண்ணம் மறைமுகமான பல தடைகள் போடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் அரசாங்கத்தை வெற்றியடையச் செய்யாவிட்டால் அதன் பின்விளைவுகளைத் தமிழர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் இங்கு அவர்கள் வாழமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்படும். சகல அபிவிருத்திகளும் உதவிகளும் நிறுத்தப்படும் என்று மிகக் கடுமையான
தொனியில் உள்மட்டத்தில் உள்ளவர்கள் நேரடியாகவே எச்சரிக்கின்றார்கள்.

இத்தகைய ஒரு நெருக்கடியில் எம்மை அழித்தவர்களைத் தருமவான்கள் என்று உலகத்திற்கு பிரகடனப்படுத்துமாறு சிந்தனையாளர்கள் நெருக்கப்படுகின்றனர். அதிஸ்டவசமாக 21ம் நூற்றாண்டு மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு என்னவென்றால் ஒவ்வொரு மனிதப் பிரச்சினைக்கும் ஏதோ ஒரு தொழினுட்பத் தீர்வு கிடைக்கக் கூடியதாக உள்ளமையாகும். ஆளணி பணப்பலம் அதிகார பலம் இவை எல்லாவற்றையும் மீறி மக்களிடையே சரியான கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கு தற்போதைய தகவல் தொடர்பு தொழினுட்ப
சாதனத்திற்கு உண்டு. வடக்கில் அனேகமான குக்கிராமங்களில் கூட எல்லோரது வீடுகளிலும் கையடக்கத் தொலைபேசி உண்டு.

அனேகமானவர்களுக்கு இலங்கைக்கு வெளியே யாரோ ஒரு தெரிந்தவர் வாழ்கின்றார். வடக்கில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு வெளியே உள்ளவர்களுக்கு இருப்பதனால் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஐ.நா. அறிக்கை சனல் 4 காணொளி ஆவணங்களைப் புதையவிடாது காப்பாற்ற அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு ஊக்கப்படுத்தலாம்.

இங்கே ஏதாவது பொருட்களைத் தந்து உதவி செய்வதைப் பற்றியே பேசுகின்றார்கள். உள்ளுராட்சி சீரமைப்பு அல்லது உரிமைகள் அரசியற் தீர்வு போன்ற எதுவுமே பேசப்படவில்லை. கோடரிக் காம்புகளும் அகோர தாண்டவம் ஆடுகின்றார்கள். எந்தவிதமான குற்ற உணர்வோ
அவமானமோ இல்லாமல் வந்து அரசுக்கு ஆதரவு தந்து வெல்ல வைக்குமாறு கேட்கின்றார்கள்.

இங்குள்ள தேர்தல் களத்தில் தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் ஆயுதக் கட்சியான EPDPக்கு எதிராக மக்கள் கருத்துக் கொண்டிருப்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவர்களது வேட்பாளர்கள் தான் அரசாங்கத்திற்காக போட்டியிடுவதனால் அரசாங்கம் இந்தக் கட்சிகளைக் கொண்டே தேர்தலை வெல்ல வேண்டியிருப்பதனால் எப்படியாவது தேர்தலை வெல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக செயற்படுவதனாலும் வெல்லுவதற்காகவே தேர்தலை நடாத்தி பழுத்த அனுபவம் உள்ள அரசின் வெற்றி சாத்தியமானதே.

அத்தகைய சாத்தியக்கூறை தவிர்க்கக்கூடிய ஆற்றல் இங்குள்ள தமிழ் மக்களிடம் தற்போது ஆற்றல் இல்லை அவர்களும் முப்பது ஆண்டுகளாக நலிவடையச் செய்யப்பட்ட ஒரு TNA என்ற
பலவீனமான ஒரு கூட்டைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. TNA என்ற அமைப்பை அது எவ்வளவு பலவீனங்களைக் கொண்டிருப்பினும் தற்போது தவிர்க்க முடியாதபடி ஆதரிக்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாக உள்ள ஐ.நா. அறிக்கை மற்றும் சனல் 4 ஆவணங்கள் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் அவர்கள் ஏகோபித்த முறையில் TNA ஐத் தெரிவு செய்தல் கட்டாயமானதாகும். நாமும் இதனை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு இணையான தீர்ப்பாக வழங்க வேண்டியுள்ளது. அரசாங்கம் இதனை தமிழ் மக்கள் வழங்குகின்ற ஒப்புதல் வாக்காக உலகத்திற்குக் காட்ட திட்டம் கொண்டு இதனை ஒரு சர்வசன வாக்கெடுப்பாகவே கருதி செயற்படுகின்றது.
இதன் கருத்து யாதெனில் வடக்கில் உள்ள பிரதேச சபைகளுக்கான தேர்தல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலேயே பிரச்சாரம் செய்யப்படவேண்டியுள்ளது. உணர்வுபூர்வமாக இப்பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று இங்கு அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டு கருத்துக்களை வெளியிட முடியாத அன்பு நெஞ்சங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது நடைபெறும் தேர்தல் யாதெனில் கடந்த முறை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டன. அத்தகைய விடுபட்ட உள்ளூராட்சி மன்றங்கள் 25இற்கு வடக்கிலும் கிழக்கிலும் இம்முறை தேர்தல் நடைபெறுகின்றது. பின்வரும் நகரசபைகட்கும் பிரதேச சபைகட்கும் 23-07-2011 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

23.07.2011 அன்று உள்ளுராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களும் அவற்றின் கீழ் உள்ள முக்கிய கிராமங்களும்:

மாவட்டம் :- யாழ்ப்பாணம்
01. பிரதேச சபை : காரைநகர்
குமிலான்குளி பாயாரிக்கூடல் சக்களாவோடை மணற்காடு பத்தர்கேணி புளியங்குளத்தடி செம்பாடு தங்கோடை கள்ளித்தெரு வாரிவளவு கள்ளந்தாழ்வு சல்லை மாதாடை வேம்படி
சின்னாலடி மானிடல் மணற்பிட்டி வேதரடைப்பு முல்லைப்புலவு ஊரிக்காடு கோவளம் ஆயிலை நாவற்கண்டி தங்கோடை சாம்பலோடை மொந்திபுலம் இடைப்பிட்டி சத்திராந்தை காரைப்பிட்டியந்தானை பிட்டியில்லை பொன்னாவலை திக்கரை நந்தாவில் விலாணை அழகாபுரி கறுவியாத்தன்னை திக்கரை பாலாவோடை வாலுபோடை ஊரிகளபூமி பாலாவோடை தோப்புக்காடு சாந்திபுரம் மாடத்துவளவு அம்புலா கோட்டைப்புலம் வாரிவளவு கல்லாந்தாழ்வு கறுங்காலி கேசாடை வியாவில் பாலகாடு நீலான்காடு வீரகுளத்தடி றீலாபிட்டி ராசாவின்தோட்டம் வேதாரடைப்பு இலந்தைசாலை சாந்தம்புளியடி சக்களவோடை வலந்தலை எலக்கடி பெரியமணல் சடையாளி மாப்பனாவூரி மல்லிகை நீலிபாந்தனை மருதடி நடுத்தெரு பாண்டித்தாழ்வு கனகர்கண்டி நெடுங்காடு பழையகண்டி சம்பந்தர்கண்டி.

02. பிரதேச சபை: ஊர்காவற்றுறை
அனலைதீவு எழுவைதீவு பருத்தியடைப்பு ஊர்காவற்றுறை மாங்குளி ஆயிதம்புலம் உப்புக்குளம் பாலாவி கோகிலாமாந்தை அம்பாலப்புலம் ஓமுவில் பாலகாடு சின்னமூலையடி வட்டுவில் சுருவில் கரம்பொன் மெருஞ்சிமுனை உத்தரபிட்டி துலாவிகுளம் மாவடிக்காடு செட்டியர் தோட்டம் சந்தைக்காடு கொக்குறுணி பெரியபுலம் தம்பாட்டி தம்பிரான் தோட்டம் அம்பாலபுலம் பெரியபுலம் நாரந்தனை கொட்டான்காடு சூரியாவத்தை வண்ணநகர் புதுக்குடியிருப்பு சுருவில் சின்னமடு சரவணை புளியங்கூடல் சுருவில் தானுவில்

03. பிரதேச சபை: நெடுந்தீவு பனன்காணி கோட்டைக்காடு கோருவாண்டு நெலுவினி புதுக்குடியிருப்பு அம்பிகைபுரம் சரப்பிட்டி முதலியார்குளம் முருகுச்சி கலவாரை நெடுங்குளம் சிகிரியாம்பள்ளம் யாகப்பர் தோமையார் யூதாதீவு வெட்டுக்காளி பெருக்கடி கிராமம் யுவினயர் கிராமம் குருநகர் மேற்கு மாதா கிராமம் பிடாரி அம்பாள் கிராமம் மாவிலிகிராமம் செபநாயகபுரம் காவோலையம்பாலை
கிராமம் ஆலாமாவான கிராமம்.

04. பிரதேச சபை: வேலணை
மண்டைதீவு சிறுத்தீவு குருசடிதீவு அல்லைப்பிட்டி மண்கும்பான் சங்குத்துறை பள்ளம்புலம் சோலாவத்தை அராலிவெளி சாட்டி செட்டிபுலம் துறையூர் வங்களாவடி சிற்பனை திருவள்ளுவர் கிராமம் துறையூர் கண்ணபுரம் சரவணை ஊராதீவு வாராதீவு மடத்துவெளி கம்பிலாயன் பல்லக்கட்டி மாவுத்திடல் வள்ளன் கண்ணகிபுரம் தோங்குதிடல் குறிஞ்சிக்காடு கோட்டைக்காடு புங்குடுதீவு மாணாவெள்ளை பரந்தாதோட்டம் வடக்கு பெருகாடு கரந்தடி சங்கத்தார் கேணி நடுவுத்திருத்தி குறிகட்டுவான் இறுப்பிட்டி களுதைப்பிட்டி நுனுகால் கீராதீவு சின்ன இறுப்பிட்டி நடுவக்காடு வெள்ளைப்பாட்டு மாந்தரை வாந்துறை தெகினம் கிழக்காடு.

05. பிரதேச சபை: நல்லூர்
மணியந்தோட்டம் உதயபுரம் நாவலடி பூம்புகார் அரியாலை சிறுசெம்மணி முள்ளி வண்ணார்பண்ணை கந்தர்மடம் கைலாசபிள்ளையார் நல்லூர் திருநெல்வேலி முடமாவடி செங்குந்தா பூத்தவராயர் கோவில் கோண்டாவில் வடமேற்கு கோண்டாவில் தென்மேற்கு கோண்டாவில் மத்தி மேற்கு கோண்டாவில் மத்தி கிழக்கு கோண்டாவில் வடகிழக்கு அன்னங்கை கோண்டாவில் தென்கிழக்கு கொக்குவில் வடகிழக்கு நந்தாவில் கொக்குவில் கிழக்கு தலையாழி பிரம்படி கொக்குவில் வடமேற்கு கொக்குவில் மேற்கு கொக்குவில் மத்தி கிழக்கு காந்திஜீ கேணியடி ஐயனார்கோவிலடி கொக்குவில் மத்தி மேற்கு.

06. பிரதேச சபை : வலிகாமம் தென் மேற்கு
சுதுமலை வடக்கு சுதுமலை தெற்கு கெல்லாவில் பாந்தியடி ஈச்சடி சாவற்காடு பந்தியடி கூழாவடி கூரான்குளிப்பான் உயரப்புலம் பள்ளிக்காடு கூளாவடி முல்லை ஆனைக்கோட்டை காக்கைதீவு நவாலி வடக்கு நவாலி கிழக்கு நவாலி தெற்கு மானிப்பாய் உச்சியோடை வடலித்தோட்டம் ஆனந்தன் கிராமம் செல்லர்வளவு கட்டுடை கேலான்காமம் எழுமுல்லை தோரான்தோட்டம் மருதடி சண்டிலிப்பாய் மடத்தடி தோப்பு சண்டிலிப்பாய் இளவாலை தேனிபுளியடி சீரணி ஐயனார்கோவிலடி கொம்பனிப்புலம் சூரியோதயா யாவில் மாகியப்பிட்டி வடலியடைப்பு பண்டத்தரிப்பு பிரான்பற்று சாந்தை சில்லாலை மாதகல் காஞ்சிபுரம் சகாயபுரம் வில்வளை சகாயபுரம் வில்வளை போதிப்புலம் நூனாசாயடி மாதர் கடவை ஆந்தியோலை சிறுவிலான் பெரியவிழான் மாரீசன்கூடல் உயரப்புலம் முல்லையடி சித்திரமேலி கல்லூரியடி வட்டப்புலம் வாதமடக்கி முல்லானை.

07. பிரதேச சபை: வலிகாமம் மேற்கு
வட்டுக்கோட்டை கலைநகர் பிலாவத்தை சங்கரத்தை துணைவி அராலி ஊராத்தி கோட்டைக்காடு தேன்மூலை வேப்பியண்ணி வடமூலை கூழானைமரத்தடி வீமன்காமம் ஐயனார் கிராமம் செட்டியாமடம் மகிலிபுலம் சின்னவளவு பாடசாலையடி நாகேந்திரமடம் மடத்தடி நாம்பபுலம் வட்டுக்கோட்டை பச்சாந்தை கேணிக்கடவை தொல்புரம் நெல்லியான் நீர்த்துவான் கல்விலான் பொன்னாலை மூளாய் சுளிபுரம் கல்லுவான் குட்டியாபுலம் சிறுக்கபுலம் பாண்டாவெட்டி பண்ணாகம் பள்ளச்சுட்டி காலையடி பனிப்புலம் செட்டிக்குறிச்சி காலையடி சித்தன்கேணி சங்கானை நிற்சாமம் நிக்காரை மாவடிகிராமம் ஓடக்கரை தொட்டிலடி.

08. பிரதேச சபை: வலிகாமம் தெற்கு
உடுவில் பட்டுயோலை சத்தியபுரம் புதுமடம் மருதனார்மடம் பாலாவோடை மட்டகச்சி சந்திரபுரம் மல்வம் கற்பககுணை கீனிசந்தியடி கூராம்பன் வீரந்தோட்டம் பெரியமதவடி சங்குவேலி அந்திரன் ஆலடி இணுவில் வங்கியடி அச்சிராமம் அங்கலப்பை வென்போலை வட்டுவினி மன்னன்தோட்டம் பப்பாதோட்டம் தாவடி பத்தனை நுங்கியப்புலம் ஊமையன்சீமா நெல்லுப்பொரி கலட்டி வண்ணான்காடு மரித்தோட்டம் பகாதேவன் புலம் மரியபுலம் புளித்திட்டி சுன்னாகம் வாரியப்புலம் மகிழணி மாலப்பை கப்பம்புலம் வட்டுவாகைபுலம் முடவேம்படி கூறாவத்தை செல்லவளவு செட்டியார்வளவு கனகர்வளவு பருத்திகலட்டி சூழணை மூர்த்தங்கூடல் கொத்தியாவத்தை அம்பனை கந்தரோடை குடாரை மடத்தடி தம்மலை காயிட்டி நயித்தியாகாடு தம்புவத்தை கட்டுவிலானை பெரியவளவு புளியங்கிணற்றடி சிறிட்டி சிறும்பிலட்டி மதியம்பத்தனை ஏழாலை கோட்டைகாடு நக்கியம்புலம் வேலவளவு கேசவத்தனி அலவோடை வீழிசிட்டி மயிலங்காடு சூறாவத்தை புன்னாலைக்கட்டுவன் திடற்புலம் கப்பாபுலம் ஈவினை மதலோடை கம்பித்தோட்டம் வீரமனை விளாத்தியடி முத்தர்வளவு கேணியடி கோற்கரை

09. பிரதேச சபை: வலிகாமம் வடக்கு
மல்லாகம் நீலம்பனை கல்லாரை கொத்தியார்வத்தை குழமங்கால் கொட்டடி சீனகலட்டி பொன்னிபுலம் செட்டிசோலை பத்தனை தம்பயபுலம் அளவெட்டி சத்தாகலட்டி அளக்கொல்லை கும்பிளாவளை வெள்ளையம்பதி மணற்புலம் அளுக்கை கணேஸ்வரம் கலைநகர் மேலையபுலம் மாரிசிட்டி கட்டுபுலம் பத்துப்பனையடி மயிலங்கூடல் வேராவில் பத்தாவத்தை சிறுவிளான் இளவாலை நவக்கிரி தையிட்டிபுலம் வீழிசிட்டி பன்னாலை கொல்லங்கலட்டி கிளானை மாவைக்கலட்டி கருகம்பனை கீரிமலை தும்பனைபுலம் பெரியபுலம் அடுவிலந்தான் மகத்தனை புதுதோட்டம் வீமன்கொடை அம்பனை மாவிட்டபுரம் பட்டைகடவை காங்கேசன்துறை தந்தை செல்வாபுரம் பன்னாலை வித்தகபுரம் பழைவீமன்காமம் கட்டுவன் வலமாரி தண்ணீர்தரிவு தெணியாமலை வறுத்தலைவிளான் மடத்தடி குரும்பசிட்டி வசாவிளான் மயிலிட்டி குட்டியபுலம் தென்மூலை மந்திரம்பிராய் ஆதி மயிலிட்டி கிராமகோட்டடி கூத்தன்சீமா கொத்தியாவத்தை முலவை சங்குவத்தை கொத்தாவத்தை தையிட்டி மயிலிட்டித்துறை பெரியகட்டுவன்துறை வீரமாணிக்கதேவன் துறை ஊறணி தையிட்டி ஒட்டகபுலம் பல்லாபுலம் பயிர்க்கலட்டி பலாலி அந்தோனிபுரம் முருக்கட்டி தொட்டுவை

10. பிரதேச சபை: வலிகாமம் கிழக்கு
இருபாலை கட்டைப்பிராய் நாயன்மார்க்கட்டு நல்லூர் அரசடிபகுதி கல்வியங்காடு கோப்பாய் நாவலடி இராமநாதன்கலட்டி பழையதபாற்கந்தோர் உதயதாரகைமதவடி வைரகன்னி தொல்பிட்டி உரும்பிராய் ஓடையம்பதி செல்வாபுரம் யோகபுரம் ஊரெழு கரந்தன் நீர்வேலி மலைபுதிய கிராமம் சிறுப்பிட்டி ஜனசக்தி பூமகள் வேம்பிராய் புத்தூர் நவக்கிரி ஆவரங்கால் மணற்பகுதி அச்சுவேலி அச்செழு வேவிபுரம் பூலசிட்டி போயிட்டி வாதரவத்தை பெரியம்பொக்கனை வீரவாணி பத்தைமேனி தம்பாலை கதிரிப்பாய் இடைக்காடு வளளாய்

11. பிரதேச சபை: சாவகச்சேரி
கைதடி நவாபுரம் செம்பாடு குமரன் நகர் ஊரியன்காடு நாவற்குழி தச்சன்தோப்பு நாவற்குழி தச்சன்தோப்பு கோயிலாக்கண்டி கைதடி நாவற்குழி மறவன்புலோ தனங்கிளப்பு அறுகுவெளி மண்டுவில் கெருடாவில் வேவில் வீரக்கேணி சந்திரபுரம் சரசாலை இராமாவில் கோயிலாமனை வேம்பிராய் அல்லாரை வெள்ளம்பொக்கடி கச்சாய் பாலாவி கொடிகாமம் எருவன் தவசிகுளம் உசன் கரம்பகம் ஒட்டுவெளி விடத்தற்பளை கெற்பெலி எழுதுமட்டுவாழ் படித்த மகளிர் திட்டம் மன்னன்குறிச்சி குருக்கள்மாவடி மிருசுவில் குடமியன் நாவற்காடு வரணி மாசேரி இடைக்குறிச்சி கரம்பைக்குறிச்சி வரணி இயற்றாலை தாவளை இயற்றாலை மந்துவில் கிழக்கு நந்திவலை செம்பாடு கும்பாவெளி பனங்காடு குடியிருப்பு கலட்டி

12. பிரதேச சபை: வடமராட்சி தெற்கு மேற்கு
கரணவாய் சோழங்கன் வீரபத்திராயன் கல்லுவம் மண்டான் அந்திரான் அண்ணா சிலையடி செல்வாபுரம் உச்சில் காவில் மணற்பாதி நுகாவில் கலட்டி குருக்கள்பகுதி உடுப்பிட்டி இலகடி பங்கூரன் நாவலடி வலியந்தோட்டம் கொம்மாந்தறை சத்திரந்தை அதியமலை பண்டகை வல்வெட்டி தேருவில் நெடுங்காணி மாவடி இலந்தைகாடு சமரபாகு இலந்தைகாடு மாடந்தை வேவில் செம்பாட்டோடை இமையாணன் திடல் இமையாணன் துவலியார் நவிண்டில் கொற்றாவத்தை வதிரி சீனட்டி மூத்தவிநாயகர் கோயிலடி நாவலர்மடம் இராசகிராமம் கன்பொல்லை இடைக்குறிச்சி சாண்டில் உச்சில் மத்தொனி சாமியன் அரசடி கரவெட்டி சம்பந்தர் கடையடி கிழவி தோட்டம் புதுக்குளம் வரியந்தனை காட்டுப்புலம் தெடுத்தனை யார்க்கரு கட்டைவேலி செட்டியார் பகுதி கலிகை வேம்படி துன்னாலை அல்லையம்பதி கோவிற்கடவை தாமரைக்குளத்தடி வதிரி நெல்லியடி புலவரோடை தேவரையாளி கல்வத்தை முடக்காடு கலயந்தோட்டம் அல்வாய் குமிழடி மனோகரா
மாலிசந்தி ஓடை பூவற்கரை பட்டியோடை அத்தாய் மடத்தடி இலகடி கப்புதூர் அந்தணன்திடல் கரம்பன்

13. பிரதேச சபை: பருத்தித்துறை
பொலிகண்டி பாலாவி கரகத்தான்புலம் திக்கம் கட்டைப்புளியடி நீர்வளை தேவரையாளி சக்கோட்டை அல்வாய் சிதம்பரபுளியடி துளாய் சாமணந்தறை இன்பருட்டி மாவிலங்கையடி வியாபாரிமூலை திருநாவலூர் வராத்துப்பளை புனிதநகர் மாதனை சந்தாதோட்டம் மருதடி சாளம்பை பூவற்கரை வத்தனை. புலோலி சாரையடி கலட்டி கூவில் வட்டுவனை காந்தியூர் குரும்பைகட்டி கம்பாவத்தை காந்தியூர் மாயக்கை மந்திகை மடத்தடி புற்றளை சோழ கிணற்றடி உபயகதிர்காமம் அன்ரன்கடை பெருந்தெரு நறுவிலடி பல்லப்பை ஆலடி சிங்கநகர் தேவரன் துறையாமூலை கருகம்பன் வல்லிபுரம் துன்னாலை கொடிக்காடு சோலியாவத்தை தம்பலதனை மணற்காடு குடத்தனை பொற்பதி அம்பன் கொட்டோடை நாகர்கோயில் செம்பியன்பற்று தனிப்பனை மாமுனை மணியாவலை இறக்கம் நெல்லியான் மருதங்கேணி வத்திராயன் உடுத்துறை வேம்படி ஆழியவளை கொடுகிளாய் வெற்றிலைக்கேணி மண்டலை பெரியபச்சிலைபள்ளி முள்ளியான் நித்தியவட்டை போக்கறுப்பு வண்ணான்குளம் கேவில் சுண்டிக்குளம்

14. நகர சபை: வல்வெட்டித்துறை
தொண்டமானாறு கெருடாவில் மண்டபகாடு செம்பாடு மயிலந்தனை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி ரேவடி வேம்படி சிவன்கோயில் பொலிகண்டி

15. நகர சபை: பருத்தித்துறை
பருத்தித்துறை சுப்பர்மடம் தம்பசிட்டி ஓடகக் ரை துறைமுகம் nதணி தும்பளை இலட்சுமணன் தோட்டம் நெல்லண்டை கற்கோவளம் மாதனை

16. நகர சபை: சாவகச்சேரி
மீசாலை சாவகச்சேரி கல்வயல் நுணாவில் மட்டுவில்
மாவட்டம் : திருகோணமலை

17. பிரதேச சபை: குச்சவெளி
திரியாய் செந்தூர் கட்டுக்குளம் கள்ளம்பத்தை குச்சவெளி இறக்காமம் வீரன்சோலை யாஜாநகர் காசீம்நகர் கும்புறுப்பிட்டி நிலாவெளி இறக்கண்டி கோபாலபுரம் வேலூர் இக்பால்நகர் பெரியபுலம் வெள்ளையூத்து தென்னமரவடி புல்மோட்டை

18. பிரதேச சபை: கந்தளாய்
கந்தளாய் வென்ராசன்புர ராஜஎல அக்கோபுர வானல சீனிபுர சூரியபுர பேராறு ஜயன்திபுர பத்தேகம வென்ராசபுர கந்தளாவ பட்டோகச்சியா ராயவௌ பன்சல்கொடல

19. பிரதேச சபை: சேருவில
சேருவில மகாவலிகம மகிந்தபுர நாவற்கேனிக்காடு சுமேதன்காராபுர காவன்திஸ்ஸபுர சேருநுவர தங்கநகர் உப்பூல் தெகிவத்தை சோமபுர நீலாபொல சமகிபுர ஆரியம்மன்கேணி லிங்கபுரம் சிவபுரம் சிமன்கலபுர

20. பிரதேச சபை: பட்டினமும் சூழலும்
வெல்கம வெல்வேரி கன்னியா இலுப்பைக்குளம் சாம்பல்தீவு சல்லி உப்புவெளி புளியங்குளம் வரோதயநகர் பீலியடி மாங்காயூத்து ஆண்டான்குளம் சிங்கபுர கோவிலடி பாலையூத்து அபயபுர அன்புவளிபுரம் மிகிந்துபுர செல்வநாயகபுரம் ஜின்னாநகர் முருகாபுரி திருக்கடலூர் பட்டணதெரு பெருந்தெரு சிவபுரி லிங்கநகர் மட்கோ பூம்புகார் சுமேதன்கரபுர முத்துநகர் கப்பல்துறை காவட்டிகுடா நாச்சிக்குடா வெள்ளைமணல் சீனன்குடா உவர்மலை தில்லைநகர் அரசடி மனையவெளி சோனகவாடி அருணகிரிநகர் வில்லூன்றி.
மாவட்டம் : அம்பாறை

21. பிரதேச சபை: திருக்கோவில்
தம்பாட்டை தம்பிலுவில் திருக்கோவில் சாகமம் விநாயகபுரம் காஞ்சிரன்குடா சங்கமான்கிராமம் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடிச்சிஆறு

22. பிரதேச சபை: காரைதீவு
மாளிகைக்காடு காரைதீவு மாவடிப்பள்ளி
மாவட்டம் : கிளிநொச்சி

23. பிரதேச சபை: பூநகரி
நல்லூர் ஆலங்கேணி கொல்லகுறிச்சி செட்டிகுறிச்சி ஞானிமடம் மட்டுவிலந்து பள்ளிக்குடா பரமன்கிராய் ஜெயபுரம் காரியாலைநகர் பல்லவராயன்கட்டு முழங்காவில் நாச்சிக்குடா கிராஞ்சி பொன்னாவெளி இரணைத்தீவு

24. பிரதேச சபை: பச்சிலைப்பள்ளி
கோவில்வயல் இயக்கச்சி முகாவில் மாசார் சோரன்பற்று தர்மாகேணி புலோபளை முல்லையடி தம்பகாமம் பளை புலோப்பளை அல்லிப்பளை கச்சார்வெளி அரசர்கேணி இத்தாவில் முகமாலை வேம்பொடுகேணி கிளாலி உடுத்துறை ஆழியவளை வெற்றிலைக்கேணி முள்ளியான் பொக்கறுப்பு சுண்டிக்குளம்.

25. பிரதேச சபை : கரைச்சி
வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான்குளம் கண்ணகிபுரம் ஸ்கந்தபுரம் அக்கராயன்குளம் கோணாவில் பூநகர் பொன்நகர் பாரதிபுரம் மலையாளபுரம் விவேகானந்தநகர் கிருஷ்ணபுரம் உதயநகர் அம்பாள்குளம் செல்வநகர் ஆனந்தபுரம் தொண்டமாநகர் கனகாம்பிகைக்குளம் அம்பாள்நகர் திருவையாறு இரத்னபுரம் மருதநகர் பண்ணன்கண்டி கனகபுரம் திருநகர் கணேசபுரம் ஜயந்திநகர் பெரியபரந்தன் உருத்திரபுரம் சிவநகர் ஓட்டுபுலம் புதுமுறிப்பு வட்டக்கச்சி மாயவனூர் இராமநாதபுரம் மாவடியம்மன்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
இந்த மின்னஞ்சல் கிடைத்ததும் முதலில் செய்ய வேண்டியது யாதெனில் நம்பிக்கைக்குரிய மற்ற நண்பர்கட்கு குறிப்பாக மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிடப்பட்ட ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்

பலருக்கு உடனடியாக இக்கடிதத்தினை அனுப்பி வைக்கவும். தாங்கள் இக்கிராமங்களைச் சேர்ந்த நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் உங்களது நாட்டில் இருந்தே தொலைபேசியூடாகப் பேசி:

1) ஏன் கட்டாயம் TNA க்கு வாக்களிக்க வேண்டும் அதுவும்

2) நண்பகலுக்கு முன்னர் சென்று தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் (ஏனெனில் எப்படியாவது வெல்லுதல் என்ற திட்டத்தில் ஆளடையாள அட்டை இல்லாதவர்களை வாக்களிக்க விட வேண்டும் என்ற திட்டத்திற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டது. குறிப்பாக வாக்களிக்க வராதவர்களின் வாக்குகளை “அடையாள அட்டையில்லாத நபர்கள்” போடுவதற்குரிய உத்தமமான நேரம் மாலை நேரங்களாகும்.

3) ஆகக்கூடிய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் (ஏனெனில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கும் போது அது EPDP வேட்பாளர்களை தெரியப்படுத்துவதற்கான வாய்ப்புக்களைக் கொடுக்கும் அதிகமானோர் வாக்களித்தால் TNA வேட்பாளர்களை தெரியப்படுத்துவதற்கான வாய்ப்புண்டு என்பது அனுபவமாகும்).

4) அச்சுறுத்தலுக்கு பயப்படாது கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக தீவக மக்களை இந்தத் தேர்தலுடன் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனத்தில் இருந்து விடுதலை செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிற்கும் 4-5 தொலைபேசி அழைப்புக்களை எடுத்தாவது துணிந்து வாக்களிக்க ஊக்குவித்தல் வேண்டும்.

எதிர்கால நன்மைக்காக EPDP காடையர்களின் உளவியலைத் தகர்க்க இது அத்தியாவசியமானதாகும். நண்பர்கள் மட்டும் ஊக்குவிப்பது மட்டுமன்றி அவர்கள் மூலமாக ஏனையவர்களையும் ஊக்குவிக்குமாறும் அவர்களை உற்சாகப்படுத்தல் வேண்டும்.

இம்மின்னஞ்சல் கிடைக்கும் அன்பர் மேற்குறித்த பட்டியலில் உள்ள அனைத்து கிராமங்களையும் அணுகக் கூடிய வகையில் வெளிநாட்டிலுள்ள நண்பர்களை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு
கொள்வதோடு உள்நாட்டு நண்பர்கள் உறவினர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கை பின்வரும் கால அட்டவணையைப் பின்பற்றுதல் சிறந்ததாகும்.

14ந் திகதியிலிருந்து 17ந் திகதிவரை:

1) வெளிநாட்டு நம்பகரமான நண்பர்களைத் தொடர்பு கொள்ளல்
2) உள்நாட்டு நண்பர்கள் உறவினர்களுடன் (மின்னஞ்சல் தொடர்பு கொள்ளக் கூடியதாக அவர்களது இலங்கைத் தொலைபேசி இலக்கத்தினை சேகரித்து வைத்தல்

18ந் திகதியிலிருந்து 20ந் திகதிவரை:

1) இலங்கையில் உள்ள நண்பர்கள் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டுமென உற்சாகப்படுத்துதல்
2) இணையத்தள நண்பர்களுக்கு அவர்களின் இதயத்தைத் தொடக்கூடிய வகையில் இச்செய்திகளை எழுதி மக்கள் பட்ட அவலங்களைக் காட்டும் படங்கள் TNA க்கு வாக்களிக்குமாறு மற்றவர்களைக் கேட்கும் படியும் தொடர் செய்திகளை அனுப்பவும்.

அதே போல கையடக்கத் தொலைபேசிகளினூடாகவும் SMS வேண்டுகோளை அனுப்பவும். (குறிப்பு: “எப்படியாவது வெல்வது” என்ற கொள்கை அரசினால் கடைப்பிடிக்கப்படுவதால் இறுதி 3 நாட்களில் தொலைத் தொடர்புகள் செயற்படாமல் போவதற்கான வாய்ப்புண்டு.

ஆகவே இயன்றளவிற்கு இப்பணி 20ந் திகதிக்கு முன்னர் நிறைவடைய வேண்டும். அதே போல இந்த உத்திக்கு மாற்று உத்திக்கு மாற்று உத்தி கடைப்பிடிக்கக்கூடுமாதலால் 17ந் திகதிக்கு முன்னர் இதனை பகிரங்கப்படுத்துவதும் சிறந்ததல்ல.)

வெளிநாட்டில் இருந்து அடுத்த ஒரு சில நாட்களுக்குள் இலட்சக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கைத்தொலைபேசிகளுக்கு வந்தாக வேண்டும். இது ஏன் வரலாற்றுக் கடமை என்றும் குழந்தைகள் பெண்கள் உறவினர்கள் ஏன் ஒரு சந்ததியே தமது உயிரை இழக்கச் செய்து மாபெரும் நட்டத்தை நாம் சுமந்துள்ள வேளையில் சலுகைகளுக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்றும் வெளிநாட்டில் வாழும் உறவுகள் செய்கின்ற முயற்சிக்கு உள்நாட்டில் வாழும் மக்களின் ஒத்துழைப்பு ஏன் அவசியம் என்றும் வாய்ப்பைக் கைவிடக் கூடாது ஐ.நா. அறிக்கையையும் சனல் 4 ஆவணத்தையும் புதைய விடாது பாதுகாக்க இதே ஒரே வழி என்று அவர்களுக்கு கூற வேண்டும். அரச தரப்பினர் எதையாவது தந்தால் மகிழ்ச்சியோடு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுங்கள்.

ஆனால் வாக்கை மட்டும் வீட்டுச் சின்னத்திற்கு போடும்படி கூறுங்கள். இந்திய அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டவும் வேண்டும்

சிங்கள அரசாங்கம் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமே என்றும் பயம். அதனால் 50:50. TNA/ அரச கட்சிகள் வென்றால் அவர்களது உடனடிச் சமாதானம் என்றநிலை உள்ளது.

யுத்தக் குற்றம் உண்மையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதல்ல. அது இந்தியாவையே உரிய முறையில் பூட்டுப் போடுவதற்காகவே கொண்டு வரப்பட்டது. இந்த யுத்தக் குற்றத்தால் எமக்கு நேரடிப் பயன் ஒன்றும் இல்லை. ஆனால் அதை நெருக்குவதன் மூலம் வரக்கூடிய வாய்ப்புக்களே எமக்கு முக்கியம்.

எனவே தமிழ் மக்களை இத்தேர்தலில் ஏமாற்றினால் யுத்தக் குற்றக் கதையை புதைத்து விடலாம் என்பதே அரசின் நோக்கமும் இந்தியாவின் நோக்கமுமாகும். இந்த விடயத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களைப் போல TNG, GTF, BTFஎன கட்சி கட்டி நிற்கவில்லை.

TNG, GTF, BTF என்பவர்கள் தமது இலட்சியம் வெற்றிபெற உழைப்பவர்கள். இருப்பினும் எல்லோரும் வடக்குப் பிரதேசத்தில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் TNA வெற்றிபெற உழைக்க வேண்டும் என்பது எமது பேரவா. இது வரலாற்றுக் கடமையும் கூட. முள்ளிவாய்க்கால் நிகழ்வகளாலும் அதனைத் தொடர்ந்து LTTE ஆதரவாளர்களின் நடத்தையினாலும் பல வெளிநாட்டு அன்பர்கள் மனமுடைந்து போயிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் இறுதியான முள்ளிவாய்க்காலாகக் கருதப்பட வேண்டிய நிகழ்வாக இத்தேர்தலை நாம் கருத வேண்டும். தயவு செய்து முன்வந்து இப்பெரும் பணியை அவசரகால அடிப்படையில் செய்துதவுமாறு எமது உறவுகளின் இழப்புக்கள் ரீதியில் மன்னாடிக் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றிகள்.
அன்புடன் தமிழரின் விடியலைக் காண விளையும் வடக்கு கிழக்கு அன்பர்கள்

(குறிப்பு: இவ்வேண்டுகோள் மிகவும் அவசரமாக தயாரிக்கப்பட்டதனால் இதில் காணப்படும் தவறுகளை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்)

0 comments:

IP
Blogger Widgets