ரஜினி திகதிக்காக காத்திருக்கும் ஒரு திருமணம்

Tuesday, July 19, 2011


ரஜினியின் திகதிக்காக ஒரு கல்யாணம் காத்திருக்கிறது. அது ஒரு பெண் ரசிகையின் மகள் திருமணம்.
ரஜினி திகதி கொடுத்து, அவர் முன்னிலையில் தான் அந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அந்தத் தாயும் மகளும்.
ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று கேள்விப்பட்டதிலிருந்து அவர் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் பேர் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு ரசிகை, ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்தால், வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுகிறேன் என்று வேண்டுதல் வைத்தார். அந்த பெண்ணின் பெயர் கவுரி (வயது 40). சென்னை சாலிகிராமம், விஜயராகவபுரத்தில் வசித்து வருகிறார்.
இவர் தனது கையில், ”ரஜினிகாந்த் கடவுள்” என்று பச்சை குத்தியுள்ளார். இவர், ரஜினிகாந்த் பூரண குணம் அடைந்ததையொட்டி, தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை காலை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு தனது நீளமான கூந்தல் முடியை இழந்து, மொட்டை போட்டுக்கொண்டார். கவுரியுடன் சேர்ந்து, அவரது மகன் கோபிராஜ் (19), கொடுங்கையூரைச் சேர்ந்த அமுதா (39), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஹேமராஜ் (10), குடியாத்தத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் (78) ஆகியோரும் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதுகுறித்து கவுரி கூறுகையில், நான், சினிமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறேன். 8 வயதில் இருந்தே நான் தலைவர் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஏழை பெண்களுக்கு புடவை வாங்கிக்கொடுத்து, அன்னதானமும் செய்வேன்.
ரஜினிகாந்தை நான் நேரில் சந்தித்துள்ளேன். அப்போது அவர் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என்று சொல்லுவார். ரஜினிகாந்தை நான் கடவுளாகவே பார்க்கிறேன். அப்படிப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் பூரண குணம் அடைந்தால் வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டினேன்.
ரஜினிகாந்த் குணமடைந்துவிட்டதால், இப்போது மொட்டை போட்டு நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளேன். அவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். எனது மகள் லாவண்யாவுக்கும், ராஜசேகருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தலைமையில் தான் எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் என்று சபதம் செய்திருக்கிறேன். அவர் திகதி கொடுக்கும் வரை காத்திருப்போம் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets