சட்டவிரோதமாக கென்யாவிற்கு கொண்டு வரப்பட்ட யானை தந்தங்கள் தீயிட்டு அழிப்பு

Friday, July 22, 2011

சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக ‌கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து ‌வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி எனப்படும் பகுதியில் இந்த தந்தங்கள் ‌மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டன.
அதிபர் மிவாய்கிபாகி முன்னிலையில் அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன‌ை அதிப‌ரே முன்னின்று நடத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில்,"இனிமேல் கென்யாவிற்கு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இருக்கக்கூடாது. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கு முன்‌னோடியாக தான் இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன" என்றார்.
இவற்றை தவிர தாய்லாந்து, நைஜிரீயா, காங்கோ ஆகிய நாடுகளிலும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

0 comments:

IP
Blogger Widgets