இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வரும் 21 ம் திகதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்களை, இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் நேற்று அறிவித்தது.
இதில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர், சுமார் ஆறு மாத காலத்துக்கு பின் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் விளையாடினார். இப்போட்டியின் போது, இவரது கெண்டைக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து அணி வீரர்கள்: ஸ்டிராஸ் (கப்டன்), அலெஸ்டர் குக், ஜோனாதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயான் பெல், இயான் மார்கன், மட் பிரையர், ஜேம்ஸ் ஆண்டர்சன், சுவான், கிறிஸ் டிரம்லட், ஸ்டூவர்ட் பிராட், டிம் பிரஸ்னன்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஸ்டீவன் பின் நீக்கம்: டிம் பிரஸ்னன் தெரிவு
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment