வடக்கில் அமைதியான தேர்தலுக்கு

Monday, July 18, 2011

வடபகுதியில் அமைதியான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் திருப்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களிலுள்ள 19 உள்ளுராட்சி சபைகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களில் 4 இலட்சத்து 35 ஆயிரத்து 604 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பதற்கு 554 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நீதியானஇ சுதந் திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

IP
Blogger Widgets