யாழ். குடாநாட்டில் உள்ளுhராட்சி சபைகளுக்கான தேர்தலைக் பார்வையிடும் பணியில் சிவில் சமூகக் குழுவொன்றை ஈடுபடுத்துவதற்கு பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
பேராசிரியர் எம். எஸ். மூக்கைய்யா- விமல் பெர்னாண்டோ- ஜோவில்லியம்- உபெக்ஸி பெர்னாண்டோ- ராஜா செனவிரட்ன ஆகிய ஐவரை உள்ளடக்கிய இந்த சிரே~;ட சிவில் சமூகக் குழு நாளை 19ம் திகதி யாழ் குடாநாட்டுக்குப் பயணமாகும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்- தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்இ ஜே. வி. பி.யினரும் தெரிவிக்கின்ற புகார்களின் அடிப்படையிலேயே யாழ் குடா நாட்டில் சிரே~;ட சிவில் சமூக குழுவை தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த முடிவூ செய்துள்ளோம். நாளை யாழ். குடாநாட்டுக்குப் பயணமாகும்.
இக்குழுவினர் அங்குள்ள சகல பிரதேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமைகளை அவதானிப்பர். தேர்தல் தினத்தன்று தேர்தல் கண்காணிப்பு பணியில் இவர்கள் ஈடுபடுவர். இக்குழுவினர் எதிர்வரும் 24ம் திகதி கொழும்பு திரும்புவர். அதனைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டு உள்ளுhராட்சி தேர்தல் அவதானிப்பு தொடர்பாக அறிக்கை கையளிப்பர்.
யாழ்.தேர்தலை கண்காணிக்க ஐவர் கொண்ட குழு நியமனம்!
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment