ஆட்சி ஆசையில் மோகம்! வரலாற்று புகழ்மிக்க சங்கிலியனை துகிலுரிக்கும் யோகேஸ்வரி அம்மா காதில் பூச் சொருகி நியாயம் கூறுகிறார்! (படங்கள் இணைப்பு)

Sunday, July 17, 2011

யாழ். நல்லூர் முத்திரைச்சந்தியில் காலம் காலமாக இருந்த தமிழ் மன்னன் சங்கிலியன் சிலையை இடித்து தள்ளிய யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததால் நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு பாதகமாக அமையலாம் என கருதி இன்று ஊடகவியலாளர்களை அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.


கொழும்பிலிருந்து வந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களின் கமராக்களுக்கு முன்னால் நின்று சங்கிலியன் சிலையை தாம் புதிதாக அமைப்பதாக தெரிவித்துள்ளார். அமைக்கப்படும் சங்கிலியன் சிலை முன்னர் இருந்தது போல வாளை ஒங்கியவாறு வீரத்துடன் இருக்கும் தோற்றத்துடன் அமைக்கப்படுமா என யாழ்ப்பாண செய்தியாளர் ஒருவர் கேட்ட போது வாள் கதையை விடுங்க சங்கிலியன் சிலை இருந்த இடத்தில் சிலை அமைக்கப்படும் என சொன்னார் யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி.

யுத்த நினைவு சின்னங்களையும், தமிழர்களின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளங்களையும் அழித்து விடுமாறு மகிந்த ராசபக்ச அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பேசிய வடமாகாண ஆளுநர் சந்திரசிறி யுத்த நினைவு சின்னங்கள் அனைத்தையும் அழித்து விடப்போவதாக தெரிவித்திருந்தார். இதன் ஒரு அங்கமாகவே கற்சிலைமடு பண்டாரவன்னியன் சிலை அதைத் தொடர்ந்து சங்கிலியன் சிலையும் அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு உடந்தையாக யோகேஸ்வரி போன்றோர் உள்ளனர்.

யாழ். மாநாகரசபை பகுதியில் சிங்கள வியாபாரிகளின் ஆதிகம் அதிகரித்து வருகிறது.

புனித பிரதேசமாக இருக்கும் நல்லூர் கோவிலுக்கு அருகில் உல்லாச பயணிகளுக்கான விடுதி அமைக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கள குடியேற்றங்களுக்கு யாழ்.நகரில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் யாழ்ப்பாணம் சிங்களமயமாகிறது.

தமிழர்களது வரலாற்றை மாற்றிறயமைத்து வரலாற்று சின்னங்களை படிப்படியாக அழிப்பதில் மஹிந்த அரசு அண்மையில் மும்முரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் கற்றிவைமடுவிலிருந்த பண்டாரவன்னியனது நினைவுச்சின்னம் சிதைத்து இல்லாமல் செய்யப்பட்டதும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும். இதற்கு வேறு யாரும் காரணமல்ல. யாழ்நகரில் உள்ள தமிழ் மக்களே காரணம். சிங்கள கட்சி ஒன்றை யாழ்.மாநகரசபையில் ஆட்சி பீடம் ஏற்றினால் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

0 comments:

IP
Blogger Widgets