53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்

Sunday, July 17, 2011

பெனின்சில்வேனியாவில் உள்ள U.S கல்லூரி மாணவர் ஒருவருக்கு “Love for ever” என எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று 53 வருடங்களின் பின்னர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெனிசில்வேனியாவின் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்திற்கு 1958ஆம் ஆண்டு அனுப்பப்பட்டிருந்த இந்தக் கடிதத்தை உரிய நபருக்கு ஒப்படைக்க அதிகாரிகள் தேடியதாகவும் அந்தக் கடிதம் தபால் அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


க்ளார்க் மூர் என்பவருக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது 70 வயதான க்ளார்க் மூர் வேறொரு மாநிலத்தில் வசித்து வருகிறார் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிட்ஸ்பெர்க்கிலிருந்து அனுப்பப்பட்டிருந்த, தபால் முத்திரைப் பதிவில் பெப்ரவரி 20, 1958 என பொறிக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் கடந்த வாரத்தில் தான் தம்முடைய தபால் அறையை வந்தடைந்தது என அவர்; குறிப்பிட்டார்.

இந்தக் கடிதத்திற்கான தாமதம் குறித்த காரணம் எவருக்கும் தெரியவில்லை. இந்தக் கடிதத்தில் Mr.Clark C.Moor, Junior at the University என முகவரியிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“Love forever, Vonnie” என்று அனுப்புனர் முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் வேறு எந்தத் தகவலும் அதில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் சென்ற தம்முடைய காதலர்களுக்கு மாணவர்கள் எழுதுவது போன்றே எழுதப்பட்டிருப்பதாக கல்லூரி பேச்சாளர் தெரிவித்தார்.

‘வழமையை விட அதிகமாக உன்னை இழந்ததாக உணர்கிறேன். 1000 மடங்கு அதிகமாகக் காதலிக்கிறேன். எனக்கு விரைவில் எழுது’ என அந்தக் கடிதத்தில் அந்தப் பெண் எழுதி முடித்துள்ளார்.

பல்கலைக்கழகம் விரைவில் இந்தக் கடிதத்தை மூரிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets