”ஏழாம் அறிவு” படத்தை இயக்கி முடித்ததும் அடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நாயகியாக ப்ரணிதா நடிக்க இருப்பதாக செய்தி பரவ, ”சகுனி” படத்திற்காக நாயகன் கார்த்தியுடன் நடிக்கும் ப்ரணிதா அதிர்ச்சியடைந்தாராம்.
இளைய தளபதி விஜய்யுடன் எந்த படத்திலும் ப்ரணிதா நடிக்க ஒப்பந்தமாகவில்லை. கன்னட படத்திற்காக ”துனியா விஜய்” யோடு ப்ரணிதா நாயகியாக நடிக்க பேசியிருக்கிறார்கள். இதைத்தான் ப்ரணிதா, விஜய்யுடன் நடிக்கிறார் என்று கொளுத்தி போட்டிருக்கிறார்கள்.
”சகுனி” படத்துக்கு பிறகு தமிழில் நடிக்க ப்ரணிதா ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து, கன்னடத்தில் நடிக்க கவனம் செலுத்த போகிறார் என்கிறது பட வட்டாரம். |
0 comments:
Post a Comment