ஜீவா நடித்த ”ரௌத்திரம்” படத்தின் ட்ரைலர் பார்த்து இயக்குனர் லிங்குசாமி மிரண்டு போனாராம்.
நான் ”ரௌத்திரம்” படத்தில் ஜீவாவின் நடிப்பை வெளிப்படுத்தும் விதத்தைக்கண்டு அசந்து போனேன். படத்தின் ட்ரைலரில் ஜீவாவின் மிரட்டலான நடிப்பு தெரிகிறது. ”கோ” படத்தின் வெற்றிக்கு பிறகு அவரோட சினிமா வாழ்க்கை அப்படியே மாறிடுச்சு.
தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு இணையான உயரத்தை ஜீவா தொடுவார். என்னிடம், ஜீவா உடன் இணைந்து படம் பண்ண போறீங்களா? என்று கேட்கிறார்கள். எதிர்காலத்தில் ஜீவா உடன் இணைந்து படம் பண்ண விரும்புகிறேன். அந்த நாளிற்காக காத்திருக்கிறேன் என்றும் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார். |
0 comments:
Post a Comment