நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட சோனா

Monday, July 25, 2011


கோ படத்தில் நடிகை நமீதா போன்ற கேரக்டரில் சோனா நடித்ததால், அவர் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறார் நமீதா.
கவர்ச்சி நடிகை சோனா சினிமாவில் ஓரளவு சம்பாதித்த பின்னர் சொந்தமாக பிசினஸ் மற்றும் படங்களை தயாரிக்க செய்தார்.
ஆனால் அவர் தயாரித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் கோ படத்தில் நடிகை நமீதா போன்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் நமீதாவை போன்று நடித்ததற்காக ‌சோனா மீது நமீதா கடுப்பில் இருப்பதாக தகவல்கள் பரவியது.
இதுகுறித்து கேள்விப்பட்ட சோனா, உடனடியாக நமீதாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக போன் செய்துள்ளார். ஆனால் அவர் ஒருதடவை கூட போனை எடுக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து போன் செய்துள்ளார் சோனா.
கடைசி ஒருவழியாக போனை எடுத்த நமீதா கோபத்துடன் என்ன என்று கேட்டுள்ளார். சோனாவோ "கோ" படத்தில் நடித்தது பற்றி கூறியிருக்கிறார்.
நமீதாவும் சரி பரவாயில்லை ‌என்று சொன்னதுடன். இனிமேல் போன் செய்து என்னை தொந்தரவு செய்யாதே என்று கடுப்பாக சொல்லி போனை பட்டென்று வைத்துவிட்டாராம்.

0 comments:

IP
Blogger Widgets