பாலிவுட் நடிகையாக இருந்து வந்த சமீரா ரெட்டி இப்போது தென்னிந்திய நடிகையாகவும் மாறி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மனக்கிடக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அது கன்னடப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறு வயதில் கன்னடப் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் நடிகையாகி இத்தனை காலமாகி விட்டது, ஆனால் என்னைத் தேடி ஒரு கன்னடப் படமும் வரவில்லை என்பது வியப்பாக உள்ளது.
அத்தனை மொழிப் படங்களிலும் என்னைக் கேட்கிறார்கள். கன்னடத்தில் தான் யாரும் இன்னும் அணுகவில்லை. நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சரியான வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியோடு நடிப்பேன் என்றார் சமீரா. |
0 comments:
Post a Comment