விவசாய உற்பத்தியில் நாடு தன்னிறைவடைகின்ற நிலையில்!

Monday, July 18, 2011

அமைச்சர் பசில் பெருமிதம்
யாழ்ப்பாணத்திலிருந்த New Nunavil செய்தியாளா்
நாடு தன்னிறைவடைகின்ற நிலையில் விவசாயத்துறை இன்று வளர்ச்சியடைந்து வருகிறதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குடத்தனை கிழக்கில் கமநல சேவைகள் மத்திய நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்:
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியாவது வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் சிறிய வெங்காயம்- செத்தல் மிளகாய் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
யாழ். மாவட்ட விவசாய நிலைய ங்களைப் பயன்ப டுத்தி மேற்கொள் ளப்படும் உற்பத்திகளின் மூலம் முழு இலங்கையூமே விவசாய உற்பத்தியில் தன்னிறைவூ அடையூம்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ இந்நாட்டைப் பொறுப்பேற்கும் போது நாட்டில் 88 சதவீதம் பொருளாதாரம் தன்னிறைவூ அடைந்திருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி யடைந்து வருவதை நீங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு விவசாயத்துறையில் தனனிறைவூ அடையூம் வகையில் எமது அரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு சலு கைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரமானி யத்துடன் 350 ரூபாவிற்கு உரத்தினை வழங்கி வருகின்றது.
மேலும் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவூ செய்வதற்காக இலகு கடன் வசதி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்களையூம் சலுகை அடிப்படையில் வழங்கியூள்ளோம்.
இம்மாதம் ஜூன் 5ம் திகதி முதல் மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் உரமானியம் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியூள் ளோம். வடமாகாணம் விவசாய செய்கை யில் ஏனைய பிரதேசங்களை விட முன் னணியில் இருப்பதன் காரணமாகவே 15 கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் இப்பிரதேசத் தில் விவசாயச் செய்கையில் மிகவூம் பரந்த ளவில் மேற்கொள்ளும் சிறிய வெங்காயம்- செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றன இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் போது வெளிநாடுகளுக்கு நாம் கொடுக்கும் பாரிய நிதி தடுக்கப் படுகின்றது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்த முடியூம்.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பிரதேச மக்களுக்கு தேவையான சகல உதவிகளையூம் பெற்றுக்கொடுக்க வூள்ளோம். ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போலவே இம் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விவசாய உற்பத்திக்கு தேவையான உற்பத்தி பொருட்களையூம்இ நீர் இறைக்கும் இயந்திரம்இ உரங்கள் என்பனவூம் வழங்கப்படும்.
தேவையேற்படின் இப்பிரதேச விவ சாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்கும் அமைச்சு சகல நடவடிக்கைகளை யூமெடுக்குமெனவூம் அமைச்சர் தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets