புலிகளுக்கு அரசு புனர் வாழ்வளிப்பது கூட்டமைப்பினருக்குத் தெரியாதா?

Monday, July 18, 2011

அமைச்சர் சந்திரசேன கேள்வி
யாழ்ப்பாணத்திலிருந்து New Nunavil செய்தியாளா்
புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்து வருகின்றமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குத் தெரியாதா என அமைச்சர் சந்திரசேன கேள்வி எழுப்பினார்.
இராணுவத்தில் சரணடைந்த சுமார் 12000 புலி உறுப்பினர்கள் எங்கே என்று தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகினறனர்.

புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் புனர் வாழ்வளித்து மீண்டும் சமூக வாழ்வில் இணைத்து வருவதை  உலகமே அறியூம் நிலையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்; இதைக்கூட அறியாமலிருப்பது வேடிக்கையானதென விவசாய அபிவிருத்தி மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
யாழ். அம்பன் பிரதேசத்தில் கமநலசேவை மத்திய நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற போர்வையில் யாழ். மாவட்டத்தில் சில வீதிகள் புனரமைக்கப்பட்டு அவற்றுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொய்ப்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி நடந்திருந்தால் அது எந்த இடத்தில் நடந்தது என்பதையூம் என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதையயூம் கூட்டமைப்பு உறுப்பினர்களால் நிரூபிக்க முடியூமா?
அத்துடன் யாழ் மாவட்டத்தில் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை குடியேற்றிவரகின்றதாகவம் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனா;. இதுவூம் அப்பட்டமான பொய்யாகும்.
யாழ். மாவட்டத்தில் இவ்வாறான குடியேற்றம் நடைபெற்றதாகக் கூறும் அவர்கள் எந்த இடத்தில் எவர் குடியேற்றப்பட்டார் என்பதற்கான ஆதாரத்;;தை அவர்கள் முன்வைக்கத்; தயங்குவதேன் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
அம்பன் பிரதேச கமநல சேவை மத்திய நிலையத்தை 12.6 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் அமைத்துள்ளது. இதன் காரணமாக 680 ஹெக்டேயர் நிலப் பரப்பு விவசாய நிலங்கள் பராமரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நெடுங்கேணி- செம்பியன் பற்று- மருதங்கேணி- ஆழியவலை- உருத்திராய் மற்றும் வற்றாப்பளை ஆகிய கிராம மக்களுக்கு சேதனப் பசளைகள்-விவசாய உபகரணங்கள்- மரக்கறி விதைகள் மற்றும் தென்னம் பிள்ளைகள் என்பன இந்த வைபவத்தில் இலவசமாக வழங்கப்பட்டன.

0 comments:

IP
Blogger Widgets